மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக மிக பெரிய போராட்டம்! கைகோர்க்கும் உத்தவ் & ராஜ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு அங்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக அங்கு மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே இணைந்து போராட்டத்தை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் மூன்று மொழிகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆங்கிலம், மராத்தி மொழிகளுடன் இந்தி மொழியும் கற்பிக்கப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இது குறித்த பேச்சு எழுந்தது. அப்போது அங்கு எழுந்த கடும் எதிர்ப்பால் முடிவு வாபஸ் பெறப்பட்டது.

இந்தி மொழி
இதற்கிடையே மீண்டும் அது குறித்த அறிவிப்பைச் சமீபத்தில் அம்மாநில அரசு வெளியிட்டது. அதில் மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை மகாராஷ்டிராவில் கட்டாய மொழிகளாக இருக்கும் என்றும் இந்தி டிபால்ட் மூன்றாவது மொழியாக இருக்கும். அதாவது குறைந்தது 25 மாணவர்கள் பிரஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளை கற்க விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அது 3வது மொழியாகக் கற்பிக்கப்படும். இல்லை என்றால் இந்தியே மூன்றாவது மொழியாக இருக்கும் என்பதே இதன் அடிப்படை
மகாராஷ்டிராவில் வெடிக்கும் போராட்டம்
மகாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இந்த முடிவுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் மகாராஷ்டிரக் கல்வி அமைச்சர் தாதா புசேயை சந்தித்து இது குறித்து ராஜ் தாக்கரே பேசியிருந்தார். இருப்பினும், அந்தச் சந்திப்பு முடிந்து வெளியே வந்த பிறகும் அவர் மகாராஷ்டிர அரசை விமர்சித்தார்.
தேசியக் கல்விக் கொள்கை
தேசியக் கல்விக் கொள்கையை நிறைவேற்றுவதில் மகாராஷ்டிர அரசு உண்மையாகவே உறுதியாக இருந்தால், ஆரம்பப் பள்ளி அளவில் விளையாட்டு மற்றும் கலை போன்ற பாடங்களை அறிமுகப்படுத்தலாம் என்று ராஜ் தாக்கரே சாடினார். மேலும், இந்தித் திணிப்பிற்கு எதிராக ஜூலை 6-ம் தேதி கிர்காம் சௌபாட்டியிலிருந்து தொடங்கி தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானம் வரை மிகப் பெரிய பேரணியை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். அந்தப் பேரணியில் சிவசேனா (UBT) தலைவரும் அவரது சகோதரருமான உத்தவ் தாக்கரேவுக்கும் அழைப்பு விடுப்பேன் என்பது போல அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இடையே கடந்த பல ஆண்டுகளாகவே மோதல் இருக்கிறது. இருவரும் பொது நிகழ்ச்சியில் ஒன்றாகப் பங்கேற்றுப் பல காலம் ஆகிவிட்டது. முன்னதாக இது குறித்து ராஜ் தாக்கரே கூறுகையில், "தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களை விட, மகாராஷ்டிராவின் நலன் முக்கியமானது. மராத்தி மொழி எங்களுக்கு முக்கியம்" என்றார்.
மெகா போராட்டம்
உத்தவ் தாக்கரே உட்பட அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் போராட்டத்தில் பங்கேற்கத் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் ராஜ் தாக்கரே கூறினார். அவர் மேலும் கூறுகையில், "இது மகாராஷ்டிராவின் பலத்தையும், ஆளும் மஹாயுதி அரசுக்கு மராத்தி மக்களின் பலத்தைக் காட்டுவதாக இருக்கும். இந்த அரசு எங்கள் மீது இந்தியைத் திணிக்க முயல்கிறது. போராட்டத்தில் பங்கேற்க மராத்தி கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் அழைப்பு விடுப்போம். யார் பங்கேற்கிறார்கள், யார் பங்கேற்கவில்லை என்பதை நாங்கள் கவனிப்போம். அது எங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும்" என்றார்
ஜூலை 6 பேரணி ஏன்?
ஜூலை 6ம் தேதி போராட்டம் நடத்தத் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஜூலை 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை.. அது விடுமுறை நாள் என்பதால் மாணவர்கள் பெற்றோர்களும் பேரணியில் பங்கேற்பார்கள். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை.. ஆனால் மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே முதல் வகுப்பிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இதை நான் கல்வி அமைச்சரிடம் தெரிவித்துவிட்டேன்" என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications