மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அய்யா மழையை பாத்தீங்களா.. கடைசியா கேரளா வந்துச்சு.. அப்புறம் காணாமபோச்சு.. மோசமான அபாயத்தில் இந்தியா

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Weather Update | எங்கெல்லாம் பெய்யும்? சென்னை வானிலை மையம் அறிவிப்பு- வீடியோ

    மும்பை: தென்மேற்கு பருவமழை கடந்த ஜுன் 8ம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்கியது. ஒரு சில நாட்களே நீடித்த மழை, வாயு புயல் காரணமாக இந்தியாவின் எந்த பக்கமும் இதுவரை எட்டிபார்க்கவில்லை. ஏற்கனவே வறட்சியால் மக்கள் கொடுமையை சந்தித்து வரும் நிலையில், பருவ மழை பெய்யாமல் தவறிப்போனால் பொருளாதார ரீதியாக மோசமான அபாயத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட வாய்ப்பு உள்ளது

    பொதுவாக தென்மேற்கு பருவ மழை கேரளாவில் ஜுன 1ம் தேதி வாக்கில் ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த முறை ஒருவாரம் தள்ளி அதவாது ஜுன் 8ம் தேதி வாக்கில் பருவ மழை பெய்தது. ஆனால் சில நாட்கள் மட்டுமே பெய்தது. மேற்கொண்டு மழை கேரளாவில் பெய்யவில்லை.

    நேற்று வரை கேரளாவில் 44 சதவீதம் அளவுக்கு தென்மேற்கு பருவ மழை குறைவாக பெய்துள்ளது. இப்படியே பருவ மழை பெய்யாமல் போனால் பயிரிட்ட பயிர்கள் விளையாமல் கருகிப்போய்விடும். நாட்டின் ஒரு பகுதி வறட்சியை தாங்க முடியாதநிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது.

    தண்ணீருக்கு ஏங்கி தவிக்கும் சென்னை.. இரவு பகலாக காலி குடங்களுடன் வீதியில் அலையும் மக்கள் தண்ணீருக்கு ஏங்கி தவிக்கும் சென்னை.. இரவு பகலாக காலி குடங்களுடன் வீதியில் அலையும் மக்கள்

    குறைவானமழை

    குறைவானமழை

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பாக இருக்கும் என கூறப்பட்டு இருந்தது. தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமேட் இயல்பைவிட குறைவான அளவுதான் தென்மேற்கு பருவ மழை பெய்யும் என கூறியிருந்தது.

    37 சதவீதம் பற்றாக்குறை

    37 சதவீதம் பற்றாக்குறை

    இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை காலம் என்பது ஜுன் முதல் செப்டம்பர் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு 90 சதவீதம் அளவு இந்தியாவில் மழை பெய்தது. இயல்பைவிட இது 9 சதவீதம் அளவுக்கு குறைவான மழை ஆகும். நாட்டின் சில பகுதிகளில் 37 சதவீதம் அளவுக்கு பருவ மழை குறைவாக பெய்தது.

    கால்வாசி பகுதிகளில் மழை

    கால்வாசி பகுதிகளில் மழை

    ஜுன் 1ம் தேதி தொடங்க வேண்டிய பருவ மழை ஜுன் 8ம் தேதி கேரளாவில் தொடங்கியது. அத்துடன் ஜுன் மூன்றாம் வார நிலவரப்படி நாட்டின் பாதி ஏரியாக்களில் பருவ மழை பெய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாட்டின் கால்வாசி பகுதிகளில் கூட இதுவரை மழை பெய்யவில்லை. எனவே இப்படியே போனால் குறைவான அளவு மழை பெய்யலாம் என அச்சம் எழுந்துள்ளது.

     மக்களின் வேலை வாய்ப்பு

    மக்களின் வேலை வாய்ப்பு

    இதன் காரணமாக அரிசி, கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவை விளைவது சரிந்து போய்விடும். இந்திய பொருளதாரத்தில் விவசாயிகளின் பங்கு 15 சதவிதமாக உள்ளது அதாவது 2.5 டிரில்லியன் டாலராக உள்ளது. விவசாய வேலை நம்பி 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இவை அனைத்தும் பாதிக்கப்படலாம்.

    விளைபொருட்கள் உயரும்

    விளைபொருட்கள் உயரும்

    ஏற்கனவே சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் தண்ணீர் சப்ளை சுத்தமாக இல்லை. அங்கு தண்ணீருக்காக மக்கள் மிகுந்த இன்னலை சந்தித்து வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் விவசாயம் பொய்த்துபோனால் அரிசி, பருப்பு, உள்பட விளைபொருட்கள் தாருமாறாக உயர்ந்து மக்கள் வாங்க முடியாத அளவுக்கு ஆளாகக்கூடும். எனவே தென்மேற்கு பருவமழைதான் இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானகிக்ப்போகிறது. பருவ மழை பொய்த்தால், மோசமான அபாயத்தை இந்தியா சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    English summary
    south west mansoon missing after came kerala at june 8th that is critical for the indian economy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X