5 மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனைப் போட்ட தாய்.. ஏன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது ஐந்து மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியை சேர்ந்தவர் பாபு மாலி. இவர் படாஸ் பகுதியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளது.

பாபுவின் ஐந்து மாத குழந்தை, எப்போதும் வாயில் ஜொள்ளு வடித்துக் கொண்டே இருந்தது. இதனை நிறுத்துவதற்காக, பாபுவின் மனைவி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டார். அப்போது சிலர், உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் வைத்தால் ஜொள்ளுவிடுவதை நிறுத்திவிடும் என ஆலோசனை கூறியுள்ளனர்.
இதையடுத்து, ஒரு உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் பாபுவின் மனைவி வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மீன் குழுந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் குழந்தை திணறியது.
இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்கு பின்னர், குழந்தையின் தொண்டையில் சிக்கிய மீன் வெளியே எடுக்கப்பட்டது.
அக்கம்பக்கத்தாரின் பேச்சைக் கேட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தாய் செயல்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications