Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சஞ்சய் ராவத் எம்.பி கைது எதிரொலி! மும்பையில் பெரிய அளவில் போராட்டம்.. உத்தவ் சிவசேனா அணி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவருக்கு ஆதரவாக மும்பையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவரும், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத் எம்.பி மீது பத்ரா சால் எனப்படும் குடிசை மாற்று திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் சஞ்சய் ராவத் மற்றும் அவரது தம்பி சுனில் ராவத் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தினர். இந்த சோதனையின் போது ரூ.11½ லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 சஞ்சய் ராவத் எம்.பி கைது

சஞ்சய் ராவத் எம்.பி கைது

பல மணி நேர விசாரணைக்குப் பிறகு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். சிவசேனா கட்சியில் ஏக்னாத் ஷிண்டே அணி , உத்தவ் தாக்கரே அணி என இரு பிரிவுகளாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளராகவும் அவரது அணியில் முக்கிய தலைவராகவும் உள்ள சஞ்சய் ராவத் கைது மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் தாக்கரே அணியை பலவீனப்படுத்தும் முயற்சியாகவே தன்னை கைது செய்து இருப்பதாக சஞ்சய் ராவத்தும் கூறியுள்ளார். பல மணி நேர விசாரணைக்குப் பிறகு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். சிவசேனா கட்சியில் ஏக்னாத் ஷிண்டே அணி , உத்தவ் தாக்கரே அணி என இரு பிரிவுகளாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளராகவும் அவரது அணியில் முக்கிய தலைவராகவும் உள்ள சஞ்சய் ராவத் கைது மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் தாக்கரே அணியை பலவீனப்படுத்தும் முயற்சியாகவே தன்னை கைது செய்து இருப்பதாக சஞ்சய் ராவத்தும் கூறியுள்ளார்.

 வேண்டும் என்றே கைது செய்யப்பட்டுள்ளார்

வேண்டும் என்றே கைது செய்யப்பட்டுள்ளார்

சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டது குறித்து அவரது தம்பி சுனில் ராவத் ஆவேசமாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது சுனில் ராவத் கூறுகையில், "சஞ்சய் ராவத்தை கண்டு அஞ்சி நடுங்கும் பாஜக அவரை கைது செய்துள்ளது. சஞ்சய் ராவத் கைது தொடர்பாக எந்த ஆவணத்தையும் அமலாக்கத்துறை எங்களிடம் அளிக்கவில்லை. அவர் வேண்டும் என்றே சிக்க வைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 11.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்" என்றார்.

 உச்சக்கட்ட பரபரப்பு

உச்சக்கட்ட பரபரப்பு

இதற்கு மத்தியில் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பை முழுவதும் போராட்டத்தில் ஈடுபட சிவசேனா கட்சி திட்டமிட்டுள்ளது. பெரிய அளவில் போராட்டம் நடத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க மும்பையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்களால் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சஞ்சய் ராவத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 பாஜனதா அச்சுறுத்துகிறது

பாஜனதா அச்சுறுத்துகிறது

ஏற்கனவே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, எதிர்க்கட்சிகளை தனது விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தி வருவதாகவும், விசாரணை அமைப்புகள் ஆளும் பாஜகவின் கைப்பாவை போல செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே அணியுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, உத்தவ் தலைமையிலான சிவசேனாவை பலவீனப்படுத்த இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசியல் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+