அதிகாலையில் கேட்ட அலறல்! மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. 8 பேர் பலி.. ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் கோரகான் பகுதியில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் பலியான நிலையில் 40 பேர் தீக்காயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் தான் தீவிபத்து குறித்த ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள மேற்கு கோரகான் பகுதியில் ஆசாத் மைதானத்தில் அருகே அடுக்குமாடி கட்டடம் உள்ளது. ஜெய் பவானி எனும் பெயரிடப்பட்டுள்ள இது மொத்தம் 7 அடுக்குகளை கொண்ட கட்டடமாகும்.

Mumbai 7 storey building catches fire and killed 8 people

இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் கட்டடத்தில் வசித்து வரும் மக்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கட்டடத்தின் தரைதளத்தில் பார்க்கிங் இடத்தில் திடீரென்று தீப்பிடித்தது.

இந்த தீ அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 3 வாகனங்களுக்கு பரவியது. இதனால் வாகனங்கள் எரிந்தது. அதன்பிறகு படிப்படியாக தீயானது கட்டத்தின் மீது பரவியது. 7 தளங்கள் கொண்ட இந்தக் கட்டடத்துக்கு வேகமாக தீ பரவியது. இதனால் அதில் வசித்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். தரைத்தளத்தில் தீப்பிடித்ததால் பலரால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.

Mumbai 7 storey building catches fire and killed 8 people

அவர்கள் கட்டடத்தில் சிக்கி கூச்சலிட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பொதுமக்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியாகினர். இதில் 5 பேர் பெண்கள் ஆவார்கள்.

மேலும் 40க்கும் அதிகமானவர்கள் தீக்காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீவிபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. அதனை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த துயர சம்பவத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சத்தை இழப்பீடாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், ரூ.2 லட்சம் இழப்பீடாக பிரதமர் மோடியும் அறிவித்துள்ளார். அதோடு தீக்காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+