மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை.. அவசர வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மும்பை ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நுரையீரல் பகுதி மரங்களை வெட்ட எதிர்ப்பு... தீவிரமடையும் போராட்டம் -வீடியோ

    மும்பை: மும்பை ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மும்பை ஆரே காலனி பகுதி போராட்டத்தை தற்போது உலகமே திரும்பி பார்க்க தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க வானிலை மாறுபாடு மற்றும் வெப்பமயமாதலுக்கு எதிராக பல லட்சம் மக்கள் தற்போது போராடி வருகிறார்கள்.

    சரியாக இதே நேரத்தில்தான் மும்பை ஆரே காலனி பகுதியில் உள்ள 2700 மரங்களை வெட்ட அம்மாநில நிர்வாகம் முடிவு எடுத்து இருக்கிறது. இதற்கு எதிராக கடந்த 3 நாட்களாக கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு இருக்கும் 2700 மரங்களை மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதற்கு மக்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    வழக்கு என்ன

    வழக்கு என்ன

    அதோடு அம்மாநில அரசின் முடிவிற்கு எதிராக அவர்கள் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். ஆனால் மும்பை ஹைகோர்ட் இந்த வழக்கில், மரங்களை வெட்ட அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. வெள்ளிக்கிழமை தீர்ப்பு வந்ததை அடுத்து அன்று மாலையே மரங்களை வெட்ட தொடங்கியது அம்மாநில அரசு.

    என்ன வெட்டியது

    என்ன வெட்டியது

    இதனால் இரவு முழுக்க துரிதமாக செயல்பட்டு அம்மாநில அரசு மரங்களை வெட்டி வந்தது. நேற்று மாலையே மும்பை ஆரே காலனி பகுதியில் 2700 மரங்கள் வெட்டப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு முழுக்க கூடுதலாக அங்கு மரங்கள் வெட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    அட கைது

    அட கைது

    இதையடுத்து அவசர அவசரமாக சட்டக்கல்லூரி மாணவர்களின் குழு ஒன்று நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை அணுகியது. உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். ஆரே பகுதியை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    விடுமுறை தினம்

    விடுமுறை தினம்

    தற்போது உச்ச நீதிமன்றத்தில் தசரா விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    என்ன கோரிக்கை

    என்ன கோரிக்கை

    இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. இன்று காலை 10 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷன் அமர்வு இந்த வழ்க்கை விசாரித்தது.

    என்ன தடை

    என்ன தடை

    இந்த நிலையில் இந்த வழக்கில் மும்பை ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது இருக்கும் நிலையே அங்கு நீடிக்க வேண்டும். இனிமேல் அங்கு ஒரு மரம் கூட வெட்ட கூடாது, என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    என்ன அக்கறை

    என்ன அக்கறை

    நாங்களும் சுற்றுசூழல் குறித்து அக்கறை கொண்டு இருக்கிறோம். அங்கு எத்தனை மரங்கள் வெட்டப்பட்டது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். போராட்டக்காரர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட புகார்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை இந்த மாதம் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+