Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எய்ட்ஸ்" இருக்கும்போது "உறவு"? யாரந்த பெண்.. குக்கரில் "வெந்த" சரஸ்வதி.. பெரிய துப்பு கிடைச்சாச்சு

Subscribe to Oneindia Tamil

மும்பை: லிவிங் டூ கெதர் கொலை விவகாரத்தில், முக்கிய க்ளூ ஒன்று மும்பை போலீசாருக்கு கிடைத்துள்ளது.. இதனால், அடுத்தடுத்த பகீர்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மனோஜ் என்ற அந்த நபருக்கு 56 வயதாகிறது.. சரஸ்வதி என்ற அந்த பெண்ணுக்கு 36 வயதாகிறது.. தம்பதிக்குள் தகராறு வந்துள்ளது. இதனால் சரஸ்வதியை அவர் கொடூரமாக கொன்றுவிட்டார். சடலத்தை மீட்க போன போலீசாருக்கே தலையே சுற்றி வாந்தி வந்துவிட்டதாம்.

குக்கரில் வேகவைத்த மனித சதைகள் இருந்தன.. பாதி எரிந்த எலும்புகள் டப்பாக்களில் இருந்திருக்கின்றன.. மிச்ச உடல் துண்டுகள் பக்கெட்களில் கிடந்துள்ளன.. சில உடல் பாகங்களை மிக்சியில் போட்டு அரைத்துள்ளார்..

mumbai AIIDS manoj revelations in the mira road Saraswathi case and police gets major clue

காதல்: இந்நிலையில், மனோஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "முதன்முதலில் சரஸ்வதி என்னிடம், தான் ஒரு அனாதை என்றார்.. இதனால் அவர் மேல் எனக்கு இரக்கம் ஏற்பட்டது. நானும் பெற்றோரை இழந்து தவித்ததால் சரஸ்வதியை வீட்டில் வேலைக்கு உதவிக்காக அழைத்துச் சென்றேன். அவளை ஒரு மகள் போல பார்த்துக்கொண்டேன்... ஆனால், அவள்தான் என்னை காதலிக்க தொடங்கினாள். உடனே நானும் காதலிக்க துவங்கினோம்..

எங்களுக்குள் காதல் வளர்ந்தது. இதனால் கணவன்- மனைவி போல வாழ ஆசைப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மீரா ரோட்டில் உள்ள கீதா அப்பார்ட்மென்ட்டில் வாடகைக்கு குடி வந்தோம்.. தாலிகட்டாமல் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்தோம்.. ஒருகட்டத்தில் வறுமை காரணமாக, தகராறு வெடித்தது.. கடந்த 4-ந்தேதியும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டவும், நான் அடித்து உதைத்ததில், இறந்து விட்டாள்.

எய்ட்ஸ்: எனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது. அதற்காக சிகிச்சையும் எடுத்து வருகிறேன். விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்றபோது ரத்தம் கொடுத்தபோது அதன் மூலம் எய்ட்ஸ் நோய் பரவியிருக்கும் என்று நினைக்கிறேன்.. எய்ட்ஸ் இருந்ததால் சரஸ்வதியுடன் நான் ஒருபோதும் பாலியல் உறவு வைத்துக்கொண்டதில்லை. ஆனால் அவளை கல்யாணம் செய்து கொள்ளவும் ஆசையிருந்தது என்றாலும், எய்ட்ஸ் இருந்ததால் செய்யவில்லை" என்று வாக்குமூலத்தில், தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு முக்கிய க்ளூ கிடைத்துள்ளது.. அதாவது, சரஸ்வதியின் போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்துள்ளனர்..

அதில், மனோஜ்ஜின் நடத்தை பிடிக்காமல், அவருடனான உறவை முடிக்க விரும்பி, நிறைய வாட்ஸ் அப் மெசேஜ்களை மனோஜ்ஜூக்கு அனுப்பினாராம் சரஸ்வதி..

நம்பிக்கை துரோகம்: மே 26 மற்றும் 27ம் தேதிகளில், சரஸ்வதி தனது மொபைல் போனில் இருந்து மனோஜ் சானேவுக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அந்த மெசேஜ்ஜில், "நீ என் நம்பிக்கை எல்லாத்தையும் உடைத்துவிட்டாய்... என்னை நி மிரட்டினாய், எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய்.. அதனால் உன்னுடனான உறவை நான் முடித்துக்கொள்கிறேன்" என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

நெருக்கம்: இந்த மெசேஜ்ஜை பார்த்து மனோஜ், ஆத்திரம் அடைந்தாராம்.. இவர்களுக்குள் சண்டையும் வந்துள்ளது.. அப்போதிருந்து ஒரே வீட்டில் இருந்தாலும், இருவருமே பேசிக்கொள்ளாமலேயே இருந்திருக்கிறார்கள்..

இந்த நேரத்தில்தான், இன்னொரு பெண்ணுடன், மனோஜ்ஜூக்கு நெருக்கம் இருந்ததை சரஸ்வதி கண்டுபிடித்துள்ளார்.. அதாவது, கடந்த மே 26ம் தேதி, மனோஜ்ஜின் இந்த கள்ளக்காதல் விவகாரத்தை சரஸ்வதி கண்டுபிடித்துள்ளார்.. இதை மனோஜ்ஜிடமே நேரடியாக கேட்டுள்ளார்.. அதற்குபிறகுதான், மறுபடியும் இருவருக்குள்ளும் தகராறு வெடித்துள்ளது..

mumbai AIIDS manoj revelations in the mira road Saraswathi case and police gets major clue

இந்த மெசேஜ் அனுப்பிய, அடுத்த வாரத்திலேயே சரஸ்வதி கொலை செய்யப்பட்டுள்ளதால், இந்த கொலை வழக்கில் இந்த மெசேஜ்தான் மிகப்பெரிய துப்பாக மாறியிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், மனோஜின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.. அந்த போனில் இருந்தும் சில முக்கிய தகவல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்...

திடீர் ட்விஸ்ட்: ஆனால், இந்த கொலையை மனோஜ் மிகவும் திட்டமிட்டு செய்திருக்கிறாராம்.. அதுவும் வெப் சீரிஸை பார்த்துவிட்டு சரஸ்வதியை கொல்ல திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் போலீசார்.. தனக்கு துரோகம் செய்துவிட்டதாக சரஸ்வதி சொன்னதற்கு காரணம் தெரியவில்லை.. ஆனால் வாட்ஸ்அப் மெசேஜ்-க்கு பிறகுதான், மனோஜின் கள்ளக்காதல் விவகாரமே தெரியவந்துள்ளது.

எனவே, இந்த கொலை சம்பந்தமாக அடுத்தடுத்த பகீர்கள் வெளியாகும் என்றும் போலீஸ் தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால், எய்ட்ஸ் நோயாளி எப்படி இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக இருந்தார்? சரஸ்வதி கண்டுபிடித்த அந்த கள்ளக்காதலி யார்? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.. இது தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை மும்பை போலீஸ் விரிவுபடுத்தி உள்ளனர். ..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+