வயிற்றில் இருந்த பொருளின் மதிப்பு மட்டும் ரூ.8.5 கோடி .. மும்பை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி
மும்பை: மும்பை விமான நிலையத்துக்கு கென்யாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நிக்லோஸ் என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரின் பைகளில் சோதனை நடத்தினர். அதில் எதுவும் இல்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்த போது 8.5 கோடி மதிப்புள்ள பொருள் வயிற்றில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்தியாவின் மிகமுக்கியமான விமான நிலையங்களில் மும்பை விமான நிலையமும் ஒன்று. இந்தியாவில் மிக அதிகவிமானங்கள் வந்து செல்லும் விமானங்களில் ஒன்றாகவும், 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையமாகவும் மும்பை விமான நிலையம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 920 விமானங்கள் வரை வந்து செல்லும் திறன் உடையது மும்பை விமான நிலையம்.

இங்கு ஏராளமான வெளிநாட்டு விமானங்களும், உள்ளூர் விமானங்களும் வந்து செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறு கடத்தல் பொருட்களை கடத்தி வருகிறார்கள். அவர்களை கண்காணிக்க மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துகிறார்கள்.
அந்த வகையில் மும்பை விமான நிலையத்துக்கு கென்யாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது நிக்லோஸ் என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. அதிகாரிகள் அவரின் பைகளில் சோதனை நடத்தினர்.
ஆனால் சந்தேகத்துக்கு இடமாக எந்த பொருளும் பறிமுதல் அவரிடம் கிடைக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அவரை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அப்போது வயிற்றில் விழுங்கி போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாரிகள் அந்த பயணி வயிற்றில் விழுங்கி கடத்தி வந்த 50 கொகைன் போதைப்பொருள் கேப்சூல்கள் எடுக்கப்பட்டன. அதன் மதிப்பு ரூ.8 கோடியே 65 லட்சம் ஆகும். இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications