மாதம் ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்டோ ஓட்டுநர்.. அடடே இது தெரியாம போச்சே! எப்படின்னு பாருங்க
மும்பை: மும்பையில் ஆட்டோவை ஓட்டாமலேயே, மாதம் ரூ.5-8 லட்சம் வரை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சம்பாதித்து வருகிறார். இது தொடர்பான சோஷியல் மீடியா போஸ்ட் பரவலாக ஷேராகி வருகிறது.
லென்ஸ்கார்ட் தலைவர் ராகுல் ரூபானி, தனது லிங்க்ட்இன் தளத்தில் ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார். அதில்தான் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தினமும் தனது ஆட்டோவை, மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கு வெளியே நிற்க வைக்கிறார். அங்கு விசா நேர்காணலுக்கு வருபவர்கள் தங்கள் பைகளை உள்ளே கொண்டு செல்ல முடியாமல் திணறுவதை பார்க்கிறார். உடனடியாக அவர்களிடம் சென்று பையை நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் எனக்கு நீங்கள் ரூ.1,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.
தூதரக விதிகளில் முக்கியமானது, பைகளை உள்ளே கொண்ட செல்ல அனுமதி கிடையாது என்பதாகும். இருப்பினும் இந்த தொகை அதிகமானதாக தெரியலாம். ஆனால், யாரும் ரூ.1000க்காக விசா நேர்காணலை தவறவிட மாட்டார்கள். எனவே, கட்டணத்தை செலுத்திவிட்டு பையை கொடுத்து பாதுகாக்க சொல்லிவிட்டு செல்கிறார்கள். எப்படியும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 பேர் இதுபோல வந்து போகிறார்கள். அப்படியெனில் ஒரு நாளைக்கு ரூ.30,000 வரை ஆட்டோ ஓட்டுநர் சம்பாதிப்பதாக சொல்லப்படுகிறது. ஐடி துறைகளில் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கு கூட இவ்வளவு ஊதியம் கிடைப்பதில்லை.
ஆனால் இதில் சில கேள்விகளும் எழலாம். யார் என்றே தெரியாத ஆட்டோ ஓட்டுநரிடம் எப்படி மக்கள் பைகளை கொடுத்துவிட்டு செல்வார்கள்? நாம் அந்த இடத்தில் இருந்தால் இதைத்தான் செய்வோமா? என்று தோன்றலாம். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் உள்ளூர் போலீஸ் நிலையத்துடன் தொடர்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அதாவது ஆட்டோவில் பை கொண்டு செல்லப்பட்டு ஒரு லாக்கரில் வைக்கப்படும். எனவே பை திருடு போவதற்கோ, காணாமல் போவதற்கோ வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகிறது.
ஆட்டோ என்பது ஒரு இணைப்பு புள்ளி மட்டுமே என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த லிங்க்ட்இன் பதிவில் சொல்லப்பட்டிருப்பது உண்மையா? என்பதை தெரிந்துக்கொள்ள முடியவில்லை.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை. தூதரகத்திற்கு வருபவர்கள் பையை உள்ளே கொண்டு செல்ல முடியவில்லை என்று தொடர்ந்து புலம்பி வருகிறார். x போன்ற சோஷியல் மீடியாக்களில் இது தொடர்பான பதிவுகளை பார்க்க முடிகிறது. ரூபானி என்கிற பயனர் ஒருவர்,
"நான் விசா பரிசீலனைக்காக இந்த வாரம் மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கு சென்றிருந்தேன். உள்ளே பையை கொண்டு செல்ல கூடாது என்று சொல்லிவிட்டதால் அதை எங்கே வைப்பது என் தெரியாமல் திணறினேன். அந்த நேரத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் ரூ.1000 கொடுத்தால் பையை பாதுகாப்பதாக கூறி என்னை அணுகினார். அவரிடம் பையை ஒப்படைத்தேன்" என்று கூறியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்கு ரூ.30,000 வருமானம் என்பது அசாத்தியமானது. எனவே பலரும் இது தொடர்பான போஸ்ட்டை ஷேர் செய்து வருகின்றனர். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications