176 சிசிடிவி.. 97 சிம் கார்ட்.. அலிபாபா கொள்ளையர்கள்.. மப்டியில் போலீஸ் நடத்திய மாபெரும் ஆபரேஷன்!
மும்பை: மும்பையில் கொள்ளையர் கும்பல் ஒன்றை பிடிக்க போலீசார் குழு ஒன்று வித்தியாசமான ஆபரேஷன் ஒன்றை நடத்தி உள்ளது. இந்த ஆபரேஷன் அம்மாநில மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் உள்ள தஹிசார் கிழக்கு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கொள்ளை சமபவம் நடைபெற்றது. அங்கு வீடு ஒன்றில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
வீட்டில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. உடனே போலீசாரிடம் இது பற்றி புகார் அளிக்கப்பட்டது.

கொள்ளை
பொதுவாக கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பார்த்தால், இந்த கொள்ளை சம்பவம் மிகப்பெரியது கிடையாது. இதைவிட அதிக மதிப்பு கொண்ட கொள்ளை சம்பவங்களிலேயே இன்னும் போலீஸ் குற்றவாளிகளை பிடிக்கவில்லை. ஆனால் இந்த குறிப்பிட்ட கொள்ளையர்களை பிடிப்பதில் போலீசார் தீவிர ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். காரணம் இந்த கொள்ளை நடந்த விதம் ஏற்கனவே நடந்த சில கொள்ளைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது போல இருந்துள்ளது.

மும்பை
இந்த கொள்ளையர்களின் ஸ்டைல் போலீசார் அலிபாபா என்று அழைக்கும் கொள்ளை கும்பலின் ஸ்டைல் போலவே இருந்துள்ளது. அலிபாபா என்ற கும்பல் மும்பை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கொள்ளை சம்பவங்களை கடந்த சில வருடங்களாக செய்து வந்துள்ளது. அதே ஸ்டைலில் இந்த கொள்ளையும் நடந்து உள்ளது. இதனால் அந்த கும்பல்தான் இந்த வேலையையும் செய்து இருக்கும் என்று போலீசார் சந்தேகம் அடைந்து உள்ளனர்.

அலிபாபா
இதில் சில காலங்களுக்கு முன்பு கொள்ளையன் ஒருவரின் போன் நம்பர் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ட்ரு காலரில் அந்த கொள்ளையன் அலிபாபா என்று சேவ் செய்து இருந்துள்ளான். இதன் காரணமாக அந்த கும்பலுக்கும் அதே அலிபாபா என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அன்று இரவு கொள்ளை கும்பல் எங்கே சென்றது என்று போலீசார் தேடி வந்துள்ளனர். அன்று இரவு பதிவான சிசிடிவி வீடியோக்களை வாங்கி உள்ளனர்.

யார் இவர்கள்?
வீட்டிற்கு வெளியே இருக்கும் இரண்டு பக்க சாலைகளில் இருந்து கேமரா காட்சிகளை வாங்கி, பின்னர் அவர்கள் எந்த சாலையில் சென்றார்கள் என்பதை கண்டுபிடித்து, அவர்கள் சென்ற சாலைகளை அப்படியே நூல் பிடித்து சென்று உள்ளனர். அவர்கள் பல இடங்களுக்கு மாறி மாறி சென்றுள்ளனர். சிசிடிவி இல்லாத சில தெருக்களுக்குள் இவர்கள் சென்றுள்ளனர். இதனால் சிம் கார்டுகளை வைத்து சோதனை செய்துள்ளனர்.

வாகனம்
அதாவது அவர்களின் வாகனம் சென்ற பகுதிகளில் இருந்த சிம், கொள்ளை நடந்த போது ஆக்டிவாக இருந்த சிம் என்று பல எண்களை சோதனை செய்துள்ளனர். இதை வைத்து ஒரே எண்களை கண்டுபிடித்து, அந்த நபர்களை கண்காணித்து வந்துள்ளனர். அதன்படி மொத்தம் 176 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதேபோல் 97 சிம் கார்டுகளை கண்காணித்து உள்ளனர்.

ரவுண்ட் அப்
இதை வைத்து கடைசியில் குற்றவாளிகளை ரவுண்ட் அப் செய்துள்ளனர். அதில் சல்மான் சுல்பிகர் அன்சாரி, ஹைதர் அலி சைபி ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வழக்கமாக நகை விற்கும் குஷால் என்ற நபரையும் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக இருந்த மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் எல்லோரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 5 பவுன் தங்கை, 18 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications