அதிகரிக்கும் கேஸ்கள்.. இது டெல்டா அல்ல.. ஓமிக்ரான்?.. மும்பையில் தொடங்கியது கொரோனா 3ஆவது அலை
மும்பை: மும்பையில் கொரோனா 3ஆவது அலை தொடங்கிவிட்டது என மகாராஷ்டிரா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் எச்சரித்துள்ளார். எனினும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலையில் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருந்தது. அது போல் தற்போது புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் பாதிப்பிலும் இந்த மாநிலம்தான் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து டெல்லி உள்ளது.
இந்த நிலையில் கொரோனா 3ஆவது அலை மும்பையில் தொடங்கிவிட்டதாக கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டாக்டர் ஷாஷங்க் ஜோஷி இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

24 மணி நேரம்
அவர் கூறுகையில் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,500 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக கொரோனா கேஸ்கள் இரட்டிப்பாகி வருகின்றன. அனைத்து கேஸ்களும் லேசாகவே உள்ளன. மருத்துவமனை உள்கட்டமைப்பு அதிகமாக இல்லை. எனவே டெல்டா வேரியண்டிற்கு பதிலாக ஓமிக்ரான் பரவி வருகிறது.

எண்ணிக்கை அதிகம்
இதுதான் உண்மை. பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எதிர்கொள்ள முடியும் வகையில் இருக்கிறது. இதெல்லாம் ஓமிக்ரானால் அதிகரித்துள்ளது. 80 சதவீதம் பேருக்கு ஜீனோம் இருக்கிறது. எனவே இது டெல்டாவின் தாக்கம் அல்ல. மும்பையில் கொரோனா 3ஆவது அலை தொடங்கிவிட்டது. மருத்துவமனைகளில் மோசமான நிலையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

6 வாரங்களில் அதிகம்
எனவே கவலைப்பட ஒன்றும் இல்லை. பரவல் வேகமாகதான் உள்ளது. ஆனால் சளி, காய்ச்சல் போல்தான் இருக்கிறது. விரைவில் நாள்தோறும் மும்பையில் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் 6 வாரங்களில் ஓமிக்ரான் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் அச்சமடைய ஒன்றும் இல்லை, உங்கள் மருத்துவரை அணுகுங்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள்.
Recommended Video

ஓமிக்ரான்
டெல்லியிலும் கேஸ்கள் அதிகரித்தாலும் அவை லேசாகவே உள்ளன. இதுதான் ஓமிக்ரான். காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், சோர்வு, முதுகு வலி, தலை வலி உள்ளிட்டவைதான் ஓமிக்ரான் அறிகுறிகளாக உள்ளன. சுவை இழப்பையும் நுகர்வு தன்மையையும் யாரும் இழக்கவில்லை. இதுதான் டெல்டாவுக்கும் ஓமிக்ரானுக்கும் உள்ள வித்தியாசம். தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பாதிப்பு ஏற்படுகிறது உண்மைதான். ஆனால் இந்த தடுப்பூசிகள் நோய் தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ளும் என்றார். மும்பையில் வரும் ஜனவரி 7ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், கடற்கரைகள், ரிசார்ட், பப்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications