மனைவியின் உடை, சமையல் குறித்து விமர்சிப்பது குற்றமல்ல! ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
மும்பை: மனைவி அணியும் உடை, அவர் செய்யும் சமையல் குறித்து விமர்சிப்பது கிரிமினல் குற்றம் ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான பெண், மீண்டும் திருமணம் செய்த நிலையில் அந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து நடந்தது. இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் 2022 ஆம் ஆண்டு அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமண வாழ்க்கையும் அந்த பெண்ணுக்கு நிலைக்கவில்லை.

ஒன்றரை மாதங்கள் மட்டுமே இந்த திருமணம் நீடித்தது. கணவரிடம் இருந்து பிரிந்தாலும் அந்த பெண் புகுந்த வீட்டில் தன்னை கண்ணியமாக நடத்தவில்லை என புகார் எழுப்பினார். மேலும் கணவருக்கு இருந்த மனநல பாதிப்பை மறைத்து திருமணம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
அதனடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதிகள், கணவர் மற்றும் அவரது வீட்டாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.
அந்த தீர்ப்பில், உறவுகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிவினை ஏற்பட்டாலே ஒருவர் மீது ஒருவர் மிகைப்படுத்தி குற்றம்சாட்டுவது இயல்பானதாகி விடுகிறது. திருமணத்திற்கு முன்பே மணமகனுக்கு இருக்கும் நிறை, குறைகள் பற்றி மறைக்காமல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மனம் நலம் பாதிக்கப்பட்டதை மறைத்ததாக பெண் கூறும் புகார் ஏற்கும்படியாக இல்லை.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498 ஏ பிரிவின் கீழ் இதை குற்றமாக கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மனைவியின் சமையல், உடுத்தியிருக்கும் உடை பற்றி விமர்சிப்பதையும் குற்றமாக கருதமுடியாது.
ஒரு வேளை அதை குற்றமாக கருதி கணவர், அவருடைய குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்தால் அது சட்ட நடைமுறைக்கு எதிரானது. கணவர், அவரது உறவினர்களால் ஒரு பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்பட்டால் மட்டுமே இந்திய தண்டனை சட்டம் 498 ஏ பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications