காதலை கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார்.. 2 வருட சிறைக்கு பின் உண்மையை சொன்ன தங்கை..!
அண்ணன் மீது பாலியல் புகார் சொன்ன தங்கை அப்புகாரை வாபஸ் வாங்கி உள்ளார்
மும்பை: காதலை கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்ட நிலையில், 2 ஆண்டு சிறைக்குப்பின் தங்கையே உண்மையை சொல்லியதால், அண்ணன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2019-ல் மும்பையில் ஒரு சம்பவம் நடந்தது.. ஒரு இளைஞரை சிறுமி காதலித்து வந்துள்ளார்.. இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர்..

இந்த காதல் விவகாரம், சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்துள்ளது. அண்ணனுக்கு 24 வயது.. தங்கையின் காதலை அறிந்து அவரை கண்டித்துள்ளார்..
கண்டபடி ஊர் சுற்றக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார்.. ஆனால், அந்த பெண்ணோ, தன்னுடைய அண்ணனே தன்னை பலாத்காரம் செய்ததாக பகீர் குற்றச்சாட்டை கூறினார்.. தன்னுடைய அண்ணன்தான், தன்னை சரமாரி தாக்கியதாகவும், வீட்டில் அப்பா, அம்மா யாருமே இல்லாதபோது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் தெரிவித்தார். இதையடுத்து இளைஞர் மீது எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டது.
சிறுமி அளித்த புகாரின்பேரில் போலீசாரும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. இப்போது 2 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. காதலனுடன் வெளியே சென்றதற்காகவே தன்னை அண்ணன் திட்டியதாக உண்மையை முன்வந்து சொல்லி உள்ளார்.. தங்கை வாக்குமூலம் அளித்ததை அடுத்து சிறப்பு நீதிமன்றம் அந்த இளைஞரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, சம்பவம் நடந்தபோது, 2018-ல் சிறுமி மைனர் என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய கோர்ட், சிறுமியின் சாட்சியம் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை கொண்டிருப்பதால் அது நம்பகமானதாக இல்லை என்றும் கூறி, இளைஞரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications