கல்யாணம் பண்ணலன்னா.. ஓடும் ரயிலில் தள்ளிய காதலன்.. தாய் கண் முன்னே
மும்பை: திருமண விருப்பத்தை ஏற்க மறுத்ததால், ஓடும் ரயில் நோக்கி அப்பெண்ணை தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சுமேத் ஜாதவ் என்பவரும், 21 வயது பெண் ஒருவரும் ஒரே அலுவலகத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பணியாற்றி வந்திருக்கின்றனர். அப்போது முதலே இருவருக்கும் நல்ல நட்பு இருந்துள்ளது.

ஆனால், ஜாதவுக்கு குடிப்பழக்கம் இருப்பதை அறிந்த அப்பெண், கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு விலகியிருக்கிறார். எனினும், விடாப்பிடியாக அப்பெண்ணை ஜாதவ் துரத்தி வர, அவர் போலீசிலும் புகார் அளித்திருக்கிறார். புகார் செய்த பிறகு அப்பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, அந்தேரி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய அப்பெண்ணை, ஜாதவ் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். பிறகு, Khar ரயில் நிலையத்தில் இறங்கி தனது தாயிடம் ஜாதவ் பின்தொடருவது குறித்து அப்பெண் கூறியுள்ளார்.
அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய ஜாதவ், பிறகு அப்பெண்ணை தரதரவென இழுத்து, அங்கிருந்து கிளம்பிய ரயிலுக்கும், தண்டவாளத்திற்கும் இடையே பிடித்து தள்ளியிருக்கிறார்.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த அப்பெண்ணுக்கு 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பியோடிய ஜாதவை 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக மூத்த போலீஸ் ஆய்வாளர் விஜய் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications