மக்களே உஷார்! ஜெராக்ஸ் எடுக்கும்போது ஆவணங்கள் சுருட்டல்..685 சிம் கார்டுகள் வாங்கிய மோசடி நபர் கைது
மும்பை: அப்பாவி மக்களின் ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான சிம்கார்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபட்ட நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
மத்திய தொலைத்தொடர்பு துறை உதவியுடன் மும்பை சைபர் க்ரைம் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் மலபார் ஹில்ஸ் பகுதியிலிருந்து செயல்பட்டு வந்த மோசடி கும்பலை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய டிஜிட்டல் காலத்தில் புதுப் புது வடிவத்தில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வித விதமான வழிகளை கையாண்டு நடக்கும் டிஜிட்டல் மோசடிகளால் அப்பாவி மக்கள் பலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதிலும் இப்போது போலியாக கால் சென்டர்கள் தொடங்கி அதன் மூலம் அப்பாவி மக்களை குறிவைத்து நிதி மோசடி நடக்கும் குற்றங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

என்னதான், சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் இந்த குற்றங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், மும்பையில் அப்பாவி மக்களின் ஆதார் மற்றுன் பான் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி போலியாக சுமார் 685 சிம் கார்டுகளை ஒருவர் வாங்கியுள்ளார். அதிர வைக்கும் இந்த மோசடி குறித்த விவரம் வருமாறு:
மத்திய தொலைத்தொடர்பு துறையில் இருந்து மும்பை போலீசாருக்கு ஒரு அலார்ட் வந்துள்ளது. அதில், ஒரே நபர் வேறு வேறு ஆவணங்களை பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வங்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசாரும் இது தொடர்பாக தீவிர காண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் ஒரே நபர் தனது போட்டோக்களை வித விதமான கோணங்களிலும் வேறு வேறு சட்டைகளிலும் எடுத்து நூற்றுக்கணக்கான சிம் கார்டுகளை வாங்கி ஆக்டிவேட் செய்து இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இதே மோசடி கும்பலை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிம் கார்டுகள் மட்டுமன்றி, ஏராளமான செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர்.
அதேபோல அப்பாவிகள் பலரது ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஜெராக்ஸ் எடுக்க வரும் மக்களின் ஆவணங்களின் பெயர்களை திருத்தி இந்த மோசடியில் அந்த நபர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக மும்பை காவல்துறை ஆணையர் நியமித்துள்ள சிறப்பு காவல் படையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications