காதுல மாட்டுனா அது தோடு பாஸ்.. மாஸ்க் எப்படி போடணும் தெரியுமா? மும்பை போலீசின் நச் பதிவு!
பொதுமக்கள் எவ்வாறு முகக் கவசம் அணிய வேண்டும் என்பது குறித்து மும்பை போலீஸ் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.
மும்பை: முகக்கவசம் அணிவது எவ்வாறு என்பது குறித்து கிண்டலான பதிவின் மூலம் அழகாக விளக்கி இருக்கிறது மும்பை போலீஸ்.
கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து முகக்கவசமும் நம் ஆடைகளின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. தவிர்க்க முடியாததாக மாறிவிட்டதன் காரணமாக, விதவிதமான முகக்கவசங்களை வடிவமைப்பதில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இதன் காரணமாக சந்தையில் தற்போது பலவகையான முகக் கவசங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆடைக்கு தகுந்து மாதிரியான மேட்சிங் முகக்கவசங்கள் கூட சந்தைகளில் கிடைக்க துவங்கிவிட்டன.
ஆனால் இத்தனை விதமான முகக் கவசங்கள் கிடைத்தாலும் நம்ம மக்கள் அதை முறையாக அணிவதே இல்லை. எதற்காக முகக்கவசம் அணிகிறோம் என்பதே புரியாமல் பலரும் அணிகின்றனர். வாயையையும், மூக்கையும் மூடாமல், தாடையை மூடியபடி பலரும் முகக்கவசத்தை மாட்டிக்கொண்டு திரிகின்றனர்.
ஒரு சிலர் ஒரு பக்க காதில் ஏதோ காதணி போல மாட்டிக்கொண்டு நடமாடுகிறார்கள். இன்னும் எப்படி எப்படி எல்லாம் வித்தியாசமாக முகக் கவசத்தை அணியலாம் என யோசித்து அணிகின்றனர் மக்கள். அவர்களுக்கு முகக் கவசத்தை எப்படி அணிய வேண்டும் என கிண்டலான பதிவின் மூலம் விளக்கி இருக்கிறது மும்பை போலீஸ்.

இது தொடர்பாக மும்பை போலீஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த படத்தில், முதலில் ஒருவர் தாடையில் மாஸ்க் போட்டிருக்கிறார். அதை 'X' தவறு என குறிப்பிட்டு, ஸ்கார்ப் தான் இப்படி அணிவார்கள் என விளக்கப்பட்டிருக்கிறது. அடுத்து ஒருவர் முகக்கவசத்தை காதில் தொங்கவிட்டிருக்கிறார். அதை 'X' தவறு என குறிப்பிட்டு, காதணியை தான் இப்படி அணிவார்கள் என போலீசார் கிண்டல் செய்துள்ளனர்.
மூன்றாவதாக ஒருவர் மூக்கையும், வாயையும் கவர் செய்தபடி முறையாக முகக்கவசம் அணிந்திருக்கிறார். இது தான் சரியான முறை என டிக் செய்து விளக்கி இருக்கிறார்கள் மும்பை போலீசார். அவர்களுடைய இந்த நக்கல் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications