மும்பையில் மகிழ்ச்சி- 3 மாதத்தில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700 ஆக குறைந்தது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் கடந்த 3 மாதங்களில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 700 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் மிக மோசமாக கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் மொத்தம் 3,83,723 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Mumbai reports 700 Corona Positives in a day

இதில் மும்பையில் மட்டும் 1,10,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 6,132 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் மும்பையில் கொரோனா ஒருநாள் பாதிப்பு வெகுவாக குறைந்திருக்கிறது.

மும்பையில் திங்கள்கிழமையன்று மொத்தம் 8,776 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 700 பேருக்கு மட்டும் கொரோனா உறுதியானது.

அதேபோல் மும்பையில் கொரோனா பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செயயப்படுவோர் எண்ணிக்கை 73% ஆக உள்ளது. மும்பையில் தற்போதைய நிலை தொடர பொதுமக்கள் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+