"ஏன் மாஸ்க் போடலை".. அதட்டி கேட்ட போலீஸ்காரர்.. அதுக்காக இப்படியா செய்வாங்க.. குப்தாவின் சேட்டை!
போலீஸ்காரர் மீது கடைக்காரர் நாயை ஏவி விட்டுள்ளார்
மும்பை: "ஏன் மாஸ்க் போடலை" என்று கேட்டதற்காக, அந்த போலீஸ்காரர் மீது நாயை ஏவி விட்டுள்ளார் ஒரு கடைக்காரர்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
வடமாநிலங்களில் தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா டாப்பில் உள்ளது.. கடந்த வருடம் கொரோனா தொற்று பரவியபோதும், இதே மகாராஷ்டிராதான் முதலிடத்தில் நின்று மிரட்டியது..
இதனால், இந்த முறை கடுமையான கட்டுப்பாடுகள் அந்த மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளன.. மேலும், மளிகை கடைகள், பால்கடைகள், காய்கறி கடைகள் என அத்தியாவசியத்திற்காக மட்டுமே கடைகள் திறந்திருக்கின்றன..

அனுமதி
அதுவும் காலை 7 மணியில் இருந்து 11 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி தந்துள்ளனர். அதேசமயம், யாராவது மாஸ்க் இல்லாமல் வெளியே நடமாடினால், அவர்களை பிடிக்க மகாராஷ்டிராவில் பிரத்தியேக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்... யாராவது பிடிபட்டால், ரூ.200 அபராதமும் வசூலிக்கப்படுகிறது.

கண்காணிப்பு
அந்த வகையில், மும்பையில் கல்யாண்-டோம்பிவலியிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது, அந்த பகுதியில் இருந்த கடைகள் அடைப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது.. வேறு யாராவது கடையை திறந்து வைத்திருக்கிறார்களா? யாராவது மாஸ்க் போடாமல் சுற்றுகிறார்களா என்று 4 போலீஸார், 4 மாநகராட்சி ஊழியர்கள் ரோந்து மேற்கொண்டனர்.

தகராறு
அப்போது கம்பல்பாடா பகுதியில் சத்யநாராயண் குப்தா என்பவர் மட்டும் கடையை அடைக்காமல் இருந்தார்.. இவருக்கு 43 வயதாகிறது.. மேலும் மாஸ்க் போடாமல், கடைக்கு வெளியே 2 ஊழியர்களுடன் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார், ஏன் மாஸ்க் போடலை என்று கேட்டு, அவர்கள் 3 பேருக்கும் அபராதம் போட்டனர். ஆனால், அபராத பணத்தை தர முடியாது என்று சொல்லி குப்தா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. இது தகராறாக உருவெடுத்தது..

நாய்
ஒருகட்டத்தில் டென்ஷன் அடைந்த குப்தா, அவர் வளர்த்து வரும் 2 நாய்களை போலீஸ்காரர்கள் மீது ஏவிவிட்டார்.. அந்த நாய்கள் அப்படியே குரைத்து கொண்டு, போலீசார் மீது பாய்ந்தது.. ஒரு நாய் போலீஸ்காரரை கடித்து குதறிவிட்டது.. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற போலீஸார், குப்தாவையும், அவரது கடை ஊழியர் ஆனந்தையும் அதிரடியாக கைது செய்தனர்... இன்னொரு ஊழியர் ஆதித்யா தப்பி ஓடிவிட்டார்... நாயிடம் கடிபட்ட போலீஸ்காரர் இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications