4 நொடியில் 100 கிமீ வேகம்.. ஆனா விலை தான் 2 மடங்கு அதிகம்! மும்பையில் முதல் டெஸ்லா ஷோரூம் திறப்பு
மும்பை: எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது. முதற்கட்டமாக மாடல் ஒய் கார்களை விற்பனை செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளது. பல அட்டகாசமான வசதிகளைக் கொண்ட இந்த டெஸ்லா காரின் விலை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மாடல் ஒய் காரின் இந்திய விலை சீனாவை விட இரண்டு மடங்காக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
உலகின் முன்னணி மின்சார கார் நிறுவனங்களில் ஒன்றாக எலான் மஸ்கின் டெஸ்லா இருக்கிறது. ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளிலும் டெஸ்லா கார்கள் விற்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் பல்வேறு காரணங்களால் டெஸ்லா கார்களை மார்கெட்டிற்கு கொண்டு வர முடியாமல் இருந்தது. நீண்ட காலமாகவே இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது.

டெஸ்லா கார்கள்
குறிப்பாகக் கடந்த சில மாதங்களாக டெஸ்லாவின் இந்திய ஷோரூம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்தச் சூழலில் இன்று ஒரு வழியாக டெஸ்லா தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்துவிட்டது. மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மேக்கர் மேக்சிட்டி மாலில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்பட்டது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விழாவில் பங்கேற்று ஷோரூமை திறந்து வைத்தார்.
விலை எவ்வளவு
இதற்கிடையே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் எலக்ட்ரிக் காரின் விலையை அறிவித்துள்ளது. டெஸ்லாவின் மாடல் ஒய் எஸ்யூவி எலக்டிரிக் கார், இந்தியாவில் சுமார் $69,766க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. டெஸ்லா இணையதளத்தில் இது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது மாடல் ஒய் காரின் அடிப்படை மாடலான ரியர்-வீல் டிரைவ் மாடல் இந்தியாவில் ரூ.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாடல் ஒய் லாங்-ரேஞ்ச் ரியர்-வீல் டிரைவ் வேரியண்டின் விலை ரூ.68 லட்சமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிரள வைக்கும் அம்சங்கள்
டெஸ்லா அடிப்படை வேரியண்ட் ஆன ரியர்-வீல் டிரைவ் 0-100 கிமீ வேகத்தை 5.9 வினாடிகளில் எட்டும். இதன் ரேஞ்ச் 466 கிமீ ஆகும். அதேபோல் ஹையர் எண்ட் மாடலான ஒய் லாங் ரேஞ்ச் AWD 0-100 கிமீ வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டும். இதன் ரேஞ்ச் 551 கிமீ ஆகும். பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை தன்னாட்சி அவசர பிரேக்கிங் (AEB), பிளைண்ட்-ஸ்பாட் உதவி, லேன்-கீப் உதவி, ரிவர்ஸ் மற்றும் பக்கவாட்டு கேமராக்கள், டயர் அழுத்தக் கண்காணிப்பு, மேம்படுத்தப்பட்ட ஸ்பீடோமீட்டர் உள்ளிட்டவற்றையும் மாடல் ஒய் கொண்டுள்ளது.
இந்தியாவிற்கான பிரத்தியேக மாடல் ஒய் (Model Y) காரில் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த இரட்டை கலர் இருக்கும். 15.4-இன்ச் டிஸ்பிளே இதில் இருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி பல முக்கிய தகவல்களை அதிலேயே தெரிந்து கொள்ளலாம். மேலும், இணைய வசதி, வயர்லெஸ் சார்ஜிங், பல யுஎஸ்பி-சி போர்ட்கள், வாய்ஸ் கண்ட்ரோல் என ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது.
இரண்டு மடங்கு அதிகம்
முன்பே குறிப்பிட்டது போல இந்தியாவில் அடிப்படை மாடல் ரூ.60 லட்சமாகவும் மேம்பட்ட மாடல் ரூ.68 லட்சமாகவும் இருக்கிறது. இது வெளிநாடுகளை விடச் சற்று அதிகமாகும். ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் இதே மாடல் மாடல் ஒய் காரின் விலை அமெரிக்காவில் $44,990 (சுமார் ரூ.38.6 லட்சம்) ஆக இருக்கிறது. அதேபோல சீனாவில் 263,500 யுவானாகவும் (ரூ.31.5 லட்சம்), ஜெர்மனியில் 45,970 யூரோவாகவும் (சுமார் ரூ.46 லட்சம்) ஆக இருக்கிறது.
அதாவது சீனாவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக விலையிலும், ஜெர்மனியைக் காட்டிலும் சுமார் 50% அதிகமாகவும் இந்தியாவில் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்தியாவில் மட்டும் டெஸ்வா கார் விலை இந்தளவுக்கு அதிகம் என்ற கேள்வி வராலம். இந்தியாவில் முழுக் காரை இறக்குமதி செய்யும் போது அதற்கு அதிக வரி விதிக்கப்படும். உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா இந்த நடவடிக்கையை எடுக்கிறது. டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி செய்யாமல் முழு காரையும் இறக்குவதால் இறக்குமதி வரி அதிகரிக்கிறது.
டெஸ்லா திட்டம்
மும்பையில் ஷோரூம் திறக்கப்பட்டுள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் அந்நகரின் முக்கியமான வணிக மையங்களில் ஒன்றாகும். இது டெஸ்லாவின் இந்தியப் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லாவுக்கு சீனாவின் ஷாங்காயில் ஜிகா தொழிற்சாலை இருக்கிறது. ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இங்கிருந்து தான் டெஸ்லா நிறுவனம் தனது கார்களை ஏற்றுமதி செய்கிறது.
அங்கிருந்தே இந்தியாவுக்கும் ஏற்றுமதி செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுவரை சோதனை மற்றும் ஷோரூமில் நிறுத்த ஆறு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் ஆர்டர்களை பொறுத்து இது மேலும் அதிகரிக்கும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications