ஹேக் செய்யப்பட்ட "பெட் ரூம்" சிசிடிவி.. யூடியூபருக்கு நேர்ந்த பரிதாபம்.. அம்மா, சகோதரியும் கூட தப்பல
மும்பை: மும்பையைச் சேர்ந்த யூடியூபர் ஒருவரது நிர்வாண வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீனக் காலத்தில் டெக்னாலஜி ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறி இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்தையும் நம்மால் இணையம் மூலமாகவே செய்ய முடிகிறது.

அதேநேரம் சில நேரங்களில் அந்த தொழில்நுட்பமே நமக்கு எதிராகவும் மாறிவிடுகிறது. டெக்னாலஜி நமக்கு எதிராகத் திரும்பும் போது அது ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும்.
யூடியூபர்: அப்படியொரு மோசமான சம்பவம் தான் மும்பையில் நடந்துள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த யூடியூபர் ஒருவரது நிர்வாண வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியுள்ளது. நண்பர் ஒருவர் மூலம் இது குறித்து அவருக்கு யூடியூபருக்கும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து 21 வயதே ஆன அந்த யூடியூபர் சனிக்கிழமை போலீசில் புகார் அளித்தார்.
அவர் தனது பெட்ரூமில் இருக்கும் வீடியோக்கள் தான் இணையத்தில் பரவி இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று தெரிந்ததும் அவர் ஷாக் ஆகிவிட்டார். மேற்கு பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த 21 வயதான அவர், தனது வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். அந்த கேமராவை ஹேக் செய்த ஒருவரே அந்த நிர்வாண வீடியோவைப் ரெக்கார்ட் செய்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தாயும் சகோதரியும் கூட தப்பவில்லை: அந்த யூடியூபர் ஆடையின்றி பாத்ரூமில் இருந்து வெளியே வருவதும் அப்போது அவரது தாயும் சகோதரியும் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவும் அந்த வீடியோவில் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமல் அந்த ஹேக்கர் இந்த வீடியோவை கடந்த நவம்பர் 17ஆம் தேதி எடுத்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "சிசிடிவி கேமராவை ஹேக் செய்து இதைச் செய்துள்ளனர். இப்போது வல்லுநர்கள் உதவியுடன் ஹேக் செய்த அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்கிடையில், இணையத்தில் பரவும் அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளோம்" என்றார்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை: அந்த ஆண் யூடியூபர் இ ஸ்போர்ட்ஸ் பிளேயர் என்று கூறப்படுகிறது.. கடந்த சனிக்கிழமை தான் அவருக்கு இந்த நிர்வாண வீடியோக்கள் குறித்துத் தெரிய வந்துள்ளது. அதன் பின்னரே அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "எனது பெட் ரூமில் இருக்கும் அந்த சிசிடிவி கேமராவை அடையாளம் தெரியாத நபர் ஹேக் செய்துள்ளார். அதில் இருந்து வீடியோவை ரெக்கார்ட் செய்து அந்த நபர் அதை இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், அது வேகமாக இப்போது பரவி வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
யூடியூபர் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமரா ஆக்செஸ் அடையாளம் தெரியாத நபருக்கு எப்படிக் கிடைத்தது என்ற கோணத்தில் இப்போது போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். யூடியூபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications