மூச்சு கூட விட முடியவில்லை.. ஜொமேட்டோ ஊழியர் வெளியிட்ட வீடியோ.. உடனே கிடைத்த உதவி
மும்பை: வரலாறு காணாத மழையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் மும்பையில் மனிதத்தை போற்றும் ஒரு கியூட்டான சம்பவம் நடந்துள்ளது .
இந்தியாவின் வர்த்தக தலைநகரம் என்ற பெயருடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மும்பை பெருமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகனின் திருமணத்துக்காக ரூ.5,000 கோடி செலவு செய்யும் முகேஷ் அம்பானி போன்ற பில்லியனர்கள் கோலோச்சும் அதே மும்பையில், மாதம் ரூ.500 வாடகையில் குருவிக் கூண்டு போன்ற அறையில் வாழ்க்கை நடத்தும் அன்றாடம் காய்ச்சிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

@qb_07 என்ற இன்ஸ்டகிராம் ஐடியில் மும்பை ஜொமேட்டோ ஊழியர் ஒருவர் பகிர்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரன்ஜாய் போர்கோய்அரி என்பவர் மாநில அளவிலான கால்பந்து வீரர் மற்றும் சிறந்த பாடகர். பிழைப்புக்காக மும்பை சென்ற அவர் குடிசைப் பகுதியில் ஒரு குட்டியான அறையை மற்றொரு நபருடன் பகிர்ந்து வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது அறை குறித்த டூர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பிரன்ஜாய் மிகவும் குறுகலான ஒரு சாலையில் செல்கிறார். மிகவும் மெலிந்த தேகம் கொண்ட அவரே நேராக செல்ல முடியாமல், சைடாக செல்லுமளவுக்கு அந்த சாலை குறுகலானது. அந்த குறுகலான சாலையின் முடிவில், அதைவிட குறுகலான ஒரு இரும்பு படிகட்டு செல்கிறது. அதில் ஏறிச் சென்றால் முடிவில் ஒரு சிறிய அறை வருகிறது. இதற்கு மாதம் ரூ.500 வாடகை. சிமென்ட் சீட்டால் மூடப்பட்ட அந்த அறையில் துணிகளும், பொருட்களும், ஒரு பூனைக்குட்டியும் போக மீதமிருந்த இடத்தில் இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.
தன்னால் சரியாக மூச்சுக் கூட விட முடியவில்லை என்று வீடியோவில் வேதனையுடன் கூறியுள்ளார் பிரன்ஜாய்,. அந்த வீடியோவில் அவர் மேலும், "இந்தப் பகுதியில் இப்படிப்பட்ட அறை கிடைப்பதே அதிசயம் தான். என்னால் எங்கள் குடும்பத்திடம் பணம் கேட்க முடியாது. அவர்கள் ஏற்கனவே எனக்காக நிறைய செலவு செய்துவிட்டார்கள். இந்த அறையில் வசிப்பதற்கு பூனைக்கு சிரமமாக தான் இருக்கும். வெளியில் விட்டால் அது உயிர் வாழ்வது கடினமாகும். எனவே அதை என் செல்லப்பிராணியாக வளர்க்க தொடங்கிவிட்டேன்." என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ சுமார் 5 லட்சம் பார்வைகளை நெருங்கிவிட்டது. அதில் பலரும் பிரன்ஜாயை பாராட்டியுள்ளனர். குஷி என்ற பெண் மனம் உருகி, அவருக்கு மூன்று மாதம் வீட்டு வாடகையான ரூ.1,500 கொடுத்து உதவியுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications