முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் மர்ம மரணம்!
மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு அருகே சில வாரத்திற்கு முன்பு வெடிபொருட்களுடன் கார் நின்றது. தற்போது அந்த காரின் உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
முகேஷ் அம்பானி வீடு அருகே கார் நின்றதே இன்னும் மர்மமாக இருக்கும் நிலையில் தற்போது கார் உரிமையாளரும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையின் தெற்கு பகுதியில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே கடந்த பிப் 25-ம் தேதி வெடிகுண்டுகளுடன் நின்றிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காரில் சக்தி வாய்ந்த 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது. அந்த காரின் பதிவு எண் குறித்து விசாரித்தபோது தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஹிரென் மன்சுக் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்ட்டது. கார் திருடு போனதாக போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர் காரை நிறுத்துவது தெரிந்தது.. ஆனால் அவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. மேலும் மும்பை நகருக்குள் அந்த கார் செல்வதும், அதைத் தொடர்ந்து ஒரு இன்னோவா கார் செல்வதும் சிசிடிவி கேமரா காட்சிகளில் தெரியவந்தது. இந்த நிலையில் அந்த காரின் உரிமையாளர் திடீரென மரணம் அடைந்துள்ளார்.
அவரது உடல் மும்பை அருகே உள்ள ஓடைப்பகுதியில் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைக்கு விபத்து மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி வீடு அருகே கார் நின்றதே இன்னும் மர்மமாக இருக்கும் நிலையில் தற்போது கார் உரிமையாளரும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications