நாக்பூர் வன்முறையாளர்களே! உ.பி. போல புல்டோசர் வரும்.. பகிரங்க மிரட்டல் விடுத்த மகாராஷ்டிரா முதல்வர்!
மும்பை: நாக்பூரில் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவோர் சொத்துகளை அழிக்க உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாணியில் புல்டோசர்களை களமிறக்குவேன் என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் அண்மையில் ஷாவா திரைப்படம் வெளியானது. மராத்திய மன்னன் சிவாஜியின் மகன் சம்பாஜியின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்த திரைப்படம். இப்படத்தில் சம்பாஜியை, முகலாய மன்னர் அவுரங்கசீப் சித்திரவதை செய்து கொலை செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் கொந்தளித்த மராத்தியர்கள், மகாராஷ்டிரா மாநிலம் குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.

நாக்பூரில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே ப்யங்கர மோதல் ஏற்பட்டது; வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நாக்பூர் பற்றி எரிந்த நிலையில் அங்கு 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.
நாக்பூர் வன்முறையில் போலீசார் மீதும் கொடூரமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகளுக்கு மிக முக்கிய காரணமே ஜனநாயக கட்சித் தலைவர் பகிம்கான் என்கிறது போலீஸ். இதனால் பகீம் கான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே வன்முறையால் பாதிக்கப்பட்ட நாக்பூருக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று சென்றார். இது அவரது சொந்த மாவட்டமாகும். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட்னாவீஸ், வன்முறை சம்பவங்களுக்கு காரணம் உளவுத்துறையின் தோல்வி அல்ல. இன்னும் சொல்லப் போனால் உளவுத்துறை சிறப்பாகவே செயல்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டபடி நாக்பூருக்கு வருகை தருவார். அதில் எந்த மாற்றமும் இல்லை.
நாக்பூரில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் இருந்தே இழப்பீட்டுத் தொகையும் பெறப்படும். நாக்பூரில் வன்முறையாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத்தைப் போல புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும்; புல்டோசர்கள் மூலம் வன்முறையாளர்கள் சொத்துகள் நிர்மூலமாக்கப்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications