படத்தால் வந்த பஞ்சாயத்து.. அவுரங்கசீப் கல்லறையை இடிக்க கோரும் இந்துத்வ அமைப்புகள்.. நாக்பூரில் 144.!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமிய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என திடீர் போராட்டம் எழுந்திருக்கும் நிலையில் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ளது. சிறு மோதல் கலவரமான நிலையில், 15 போலீசார் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், தொடர் வன்முறை காரணமாக நாக்பூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு படத்தால் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுமா என்றால் ஆம் என பதில் அளித்து இருக்கிறது மகாராஷ்டிரா. மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியின் வரலாறு சவ்வா என்ற பெயரில் படமாக வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது இது தொடர்பாக விவாதம் எழுந்தது. அப்போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அபு காஸினி அவுரங்கசீப்பின் நடவடிக்கைகளை பாராட்டியதோடு அவரது புகழ் வாழ்க என முழக்கம் இட்டார்.
இதனால் மார்ச் 20ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்., இந்த நிலையில் முகலாய மன்னர்களிடமிருந்து மகாராஷ்டிராவை மீட்ட சத்திரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியை கொன்ற மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என திடீர் கோரிக்கை எழுந்து இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில முதல்வரான தேவேந்திர பட்னாவீஸும் அதற்கு ஆதரவாக பேச, விசுவ ஹிந்து பரிஷத்ம் பஜ்ரங் தல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால் பாபர் மசூதியை போல அவுரங்கசீப் சமாதியை இடித்து அகற்றுவோம் என எச்சரித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகள் சார்பில் மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நாக்பூரிலும் சில அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. அப்போது இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்ட நிலையில் அது கலவரமாக மாறியது. பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 போலீசார் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து 17 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் போராட்டத்தில் குதித்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்கத்தில் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே சிவசேனாவும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவும் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜ் தாக்கிராவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையும், காங்கிரஸ் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதும் கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து அவுரங்கசீப் சமாதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும் நிலையில் கலவரம் மேலும் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்துத்வ அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் வன்முறை வெடித்தது. 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.
சத்ரபதி சம்பாஜிநகர் குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி, புனே, கோலாப்பூர், நாசிக், மாலேகான் மற்றும் அஹில்யாநகர் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications