ஸ்பூன், தட்டு.. டக்கென உடம்பில் ஒட்டிகொள்ளும் இரும்புகள்.. ஷாக் தரும் காந்த நபர்.. தடுப்பூசி காரணமா?

தடுப்பூசி செலுத்தி கொண்டதால் உடம்பில் காந்த சக்தி ஏற்பட்டதாக ஒருவர் சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: 2வது டோஸ் போட்டுக் கொண்டபிறகு, தன்னுடைய உடம்பில் காந்த சக்தி வந்துவிட்டதாகவும், அதனால், ஸ்பூன், தட்டு, டம்ளர், கரண்டி போன்றவை எல்லாம் வந்து ஒட்டிக் கொள்வதாகவும் சொல்லி மிரள வைக்கிறார் நாசிக்கை சேர்ந்த 71 வயது அரவிந்த் தாத்தா..!

தடுப்பூசியை போட்டுக் கொண்டாலும் பிரச்சனை, போடாவிட்டாலும் பிரச்சனை என்ற வாதம் மக்களிடம் உள்ளது.. எனினும் தடுப்பூசி போட்டுக் கொள்வதைவிட, அதை செலுத்தாவிட்டால் ஏற்படும் பாதிப்புதான் அதிகம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட எத்தனையோ பேருக்கு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.. சிலருக்கு இந்த பக்க விளைவுகள் குறைவாக இருக்கலாம்.. சிலருக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம்.

தடுப்பூசி

தடுப்பூசி

இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அந்த நபர் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரை சேர்ந்தவர்.. பெயர் அரவிந்த சோனார்.. 71 வயதாகிறது.. இவர் கைகளில் கரண்டியை ஒட்டிக்கொண்டு நிற்கிறார்.. இந்த வீடியோதான் அது.. மேலும் தடுப்பூசியின் தாக்கம் குறித்து இவர் அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயத்தையும் சொல்லி உள்ளார்.

 காந்த சக்தி

காந்த சக்தி

அதாவது, 2வது டோஸ் செலுத்திக்கொண்ட பிறகு, கைகளில் இவருக்கு காந்த சக்தி வந்துவிட்டதாம்.. அதனால்தான், கரண்டியெல்லாம் இவரிடம் ஒட்டிக் கொள்கிறது என்கிறார். கரண்டி மட்டுமல்ல, உடலில் எந்த பாகத்தில் இரும்பு பாத்திரத்தை வைத்தாலும், அது டக்கென வந்து இவர் உடம்பில் ஒட்டிக் கொள்வதாக சொல்கிறார்.. ஸ்பூன், தட்டு, நாணயங்களும் உடலில் ஒட்டிக் கொள்கின்றன..

டாக்டர்

டாக்டர்

ஆரம்பத்தில் இந்த விஷயம் இவருக்கு சந்தோஷத்தை தந்துள்து போலும்.. ஆனால், போக போக பயம் வந்துவிடவும், உடனே போய் டாக்டரை சந்தித்து பேசியுள்ளார்.. டாக்டர்களும் இவரை செக் செய்து பார்த்துள்ளனர்.. ஆனால், இப்போதுவரை இதற்கு விடையே தெரியவில்லை.. இன்னும் இவருக்கு டெஸ்ட் செய்ய வேண்டி உள்ளதால், அதெல்லாம் முடிந்த பிறகே இந்த மேஜிக் பற்றி சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

மறுப்பு

மறுப்பு

ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தன் உடம்பில் காந்த சக்தி ஏற்பட்டதாக அரவிந்த் சொல்வதை பல டாக்டர்கள் மறுத்துள்ளனர்.. உலகம் முழுக்க எத்தனையோ பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.. அவர்களுக்கெல்லாம் இப்படியா இரும்பு உடம்பில் ஒட்டிக் கொள்கிறது? தடுப்பூசி போட்டுக்கொண்டால் இதுபோன்ற எதுவும் நடக்காது என்று தெரிவித்துள்ளனர்.

ஆயுதம்

ஆயுதம்

இதை பற்றி டாக்டர் ஹாமித் சொல்லும்போது, "இது இயற்பியல் விதிகளின்படி சாத்தியமாகும்... சருமத்தில் ஈரப்பதம் இருந்தால், ஒட்டும் இடத்தில் ஒரு வெற்றிடக் குழி உருவானால் மட்டுமே இது சாத்தியமாகும்... ஆனால் இதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு படுத்துவது சரியான விஷயமல்ல.. தடுப்பூசி ஒரு சிறந்த ஆயுதம்.. அதை பற்றி பரபரப்பான வதந்தியை மக்கள் தவிர்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.. எனினும் அரவிந்த்தின் வீடியோதான் இணையத்தில் வைரலாகிறது.. இரும்புமனிதர், காந்த மனிதர் என்று இவருக்கு பட்டப்பெயர்களும் குவிந்து வருகின்றன..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+