16 பேரை பலிவாங்கிய கட்சிரோலி குண்டுவெடிப்பு.. நக்சல் நடத்திய கொடூர தாக்குதல்.. திக் வீடியோ!
மும்பை: கட்சிரோலியில் நடத்தப்பட்ட நக்சல் தாக்குதலில் 16 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இன்று மகாராஷ்டிராவில் உள்ள கட்சிரோலியில் நக்சல்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினர். கட்சிரோலியில் எல்லை பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு இன்று மதியம் அரசு பணிகளை செய்து கொண்டு இருந்த 4 புல்டோசர்கள் நக்சல்களால் கொளுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 16 பேர் கொண்ட நக்சல் எதிர்ப்பு போலீஸ் படை சென்றது. அவர்கள் செல்லும் வழியில் நக்சல் இந்த தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியில், சாலையில் நக்சல்கள் மூலம் பல இடங்களில் கன்னி வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது.
16 பேரை பலிவாங்கிய கட்சிரோலி குண்டுவெடிப்பு.. நக்சல் நடத்திய கொடூர தாக்குதல்.. திக் வீடியோ! #naxalattack #viralvideo pic.twitter.com/znbozCX0xu
— Oneindia Tamil (@thatsTamil) May 1, 2019
சரியாக போலீசார் சென்ற ஜீப் இதில் ஏறி வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 11 வரை பலியாகி இருக்கிறார்கள். அதே இடத்தில் பதுங்கி இருந்த நக்சல் மீதம் இருந்த கமாண்டோ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 கமாண்டோ படையினர் வரை பலியானார்கள்.
இந்த நிலையில் இந்த கோரமான சம்பவம் குறித்த பதறவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தற்போது போலீசார் அங்கு விசாரணையை நடத்தி வருகிறார்கள். தாக்குதல் நடந்து முடிந்த பின் செய்தியாளர்களால் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.












Click it and Unblock the Notifications