ஆர்யானுக்கு போதை பொருள் சப்ளை செய்தவர் யார்.. உண்மையை போட்டுடைத்த அனன்யா பாண்டே?
மும்பை: ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கானுக்கு போதை பொருளை யார் சப்ளை செய்தார்கள் என்பது குறித்து தனக்கு தெரியும் என போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் நடிகை அனன்யா பாண்டேவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதானி துறைமுகத்திலிருந்து அண்மையில் 3000 கிலோ ஹெராயின் கிடைத்தது. அதன் மதிப்பு ரூ 9000 கோடி ஆகும். அது யாருடையது, யார் இதை கடத்தி வந்தார்கள் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யான் கானும் அவரது நண்பர்களும் கோவாவுக்கு சொந்தமான கப்பலில் ரேவ் பார்ட்டி நடத்தியதாக கூறப்படுகிறது.

போதை பொருள்
அந்த பார்ட்டியில் போதை பொருளை அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஷாரூக் கான் மகன் உள்பட நண்பர்கள் என விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்யானின் செல்போனை ஆய்வு செய்ததில் இந்த பார்ட்டிக்கு வருமாறு நடிகை அனன்யா பாண்டேவுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது தெரியவந்தது.

போதை பொருள்
இதையடுத்து அனன்யா பாண்டேவிடம் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் அனன்யா பாண்டேயின் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இவரிடம் கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தப்பட்டது.

அனன்யாவிடம் கோபம்
அப்போது விசாரணைக்கு தாமதமாக வந்ததால் அனன்யாவிடம் கோபமடைந்த அதிகாரிகள், இது திரைப்பட ஷூட்டிங்கோ இல்லை தயாரிப்பு நிறுவனமோ இல்லை என தெரிவித்தனராம். அவரிடம் ஆர்யானுடன் நடத்திய உரையாடல்கள் குறித்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில் நான் கஞ்சா சப்ளை செய்பவர் இல்லை. கஞ்சாவும் கஞ்சா செடியும் ஒன்று என்பது கூட எனக்கு தெரியாது.

நண்பர்கள் அழைப்பின் பேரில்
எனது நண்பர்கள் அழைப்பின் பேரில் ஒன்று அல்லது இரு முறை சிகரெட் பிடித்துள்ளேன் என்றாராம். ஒரு முறை ஆர்யானுக்கும் அனன்யாவுக்கும் இடையே நடந்த உரையாடலில் கஞ்சா சப்ளை செய்பவர்கள் யாரையாவது தெரியுமா என ஆர்யான் கேட்டதற்கு, நான் ஏற்பாடு செய்கிறேன் என அனன்யா சொல்லியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விசாரணையில் ஆர்யானுக்கு போதை பொருள் சப்ளை செய்தவர் யார் என்பது தனக்கு தெரியும் என தெரிவித்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications