Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'இது சர்வாதிகாரம்'.. செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வந்த சரத் பவாரின் மகள்! ஆளுநரை விளாசிய சுப்ரியா சுலே

Subscribe to Oneindia Tamil

மும்பை: தமிழ்நாடு மாநில அமைச்சரவையிலிருந்து வி.செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆளுநரின் நடவடிக்கை 'சர்வாதிகாரம்' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்த நிலையில், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கடந்த மாதம் 31ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், இணையமைச்சர்கள் என சிலரின் மீது இதுபோன்று வழக்குகள் இருக்கும் நிலையில் அவர்கள் தற்போது வரை அமைச்சர்களாகவே தொடர்கின்றனர்.

NCP MP Supriya Sule criticizes Governor RN Ravi on Senthil Balaji issue

எனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காரணத்தினாலேயே அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர், ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதினார். இதனையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. ஆனால் அவருக்கு உடல்நல பிரச்னை இருந்த காரணத்தினால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரிடமிருந்த துறைகளை, மூத்த அமைச்சர்களுக்கு மாற்றியும், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இந்தப் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்க மறுத்து விட்ட நிலையில், முதல்வருக்கே இருக்கக்கூடிய அமைச்சர்களைப் பரிந்துரைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, "செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்" என்று தமிழ்நாடு அரசு, கடந்த ஜூன் 16 அன்று அரசாணை வெளியிட்டது.

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி நேற்றிரவு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து சில மணி நேரங்களிலேயே, இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார். அதாவது ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் சர்வாதிகார போக்கு என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் எனில், மற்ற மாநிலங்களிலும் இது போன்று நடக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமன பொறுப்பில் இருக்கும் ஆளுநர் நீக்கம் செய்வதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என திமுகவின் கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளன.

"ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அப்பட்டமாக அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதன் உச்சகட்டமாக அமைச்சர் ஒருவரைப் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்து பின்னர் ஐந்து மணி நேரத்தில் அதை நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு இருக்க வேண்டிய நிதானமும், மாண்பும், அரசியல் சட்டத்தை மதிக்கும் பண்பும் ஆர்.என். ரவி அவர்களிடம் இல்லை. தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிற அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக என திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+