அம்பானி மனைவி அசத்திட்டாங்க.. டிபன் கடையில் அந்த உருளைக்கிழங்கு.. அதுவிடுங்க, "இந்தியா இல்லம்" சபாஷ்
மும்பை: அம்பானி குடும்பத்தில் எந்த சம்பவம் நடந்தாலும், அது உலக ஃபேமஸ் ஆகிவிடுகிறது.. அப்படித்தான் இப்போதும் நீடா அம்பானியின் 2 சம்பவங்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன.
பிரபல தொழிலபதிர் முகேஷ் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் பொதுமக்களுக்கு பரிச்சயமானவர்களே.. அம்பானியின் செல்ல மகள் இஷா அம்பானி.. இவர் ரிலையின்ஸின் சில்லறை விற்பனை வணிகத்தை நிர்வகித்து வருபவர்..

மகள் இஷா: இஷா சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகிவிடும்.. இஷாவின் 2 குழந்தைகள் வீடியோவும் இணையத்தில் வைரலாகிவிடும்.. இந்த 2 குழந்தைகளும் பிளே ஸ்கூலுக்கு சென்றபோது, முதல்நாள் இஷாவும், ஆனந்தும் ஒன்றாக சேர்ந்து வந்து, தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்தவீடியோ இணையத்தில் வைரலானது..
இப்போதும்கூட, பிள்ளைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு செல்கிறார் இஷா.. மறுபடியும் சாயங்காலம் ஸ்கூல் முடிந்ததுமே அவர்களை அழைத்து செல்ல வருகிறார். அப்படி வரும்போது, எத்தனையோ முறை, ஸ்கூலுக்கு வெளியே, மற்ற பெற்றோர்களுடன் அங்கேயே காத்திருப்பார். இந்த போட்டோக்களும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நீடா அம்பானி: அதுபோலவே, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீடா அம்பானியின் வீடியோவும் இணையத்தில் வைரலாகும்.. சமீபத்தில்கூட, மகன் ஆனந்தின் நிச்சயதார்த்ததிற்கு நீடா அம்பானி ஆடிய நடனமும் இணையத்தில் வைரலானது. இளம் வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டவராம் நீடா.
இதோ இப்போதுகூட நீடாவின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அம்பானி - நீடாவின் மகன் ஆனந்த் திருமணம் அடுத்த மாதம் 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ அரங்கில் நடக்க உள்ளது.. ராதிகா மெர்ச்சண்ட் என்பவரை ஆனந்த் திருமணம் செய்ய போகிறார்.. இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன.
மகன் திருமணம்: தன்னுடைய மகன் திருமணத்தை முன்னிட்டு நீடா அம்பானி, காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இது குறித்து நீடா சொல்லும்போது, " ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண அழைப்பிதழை விஸ்வநாதர் சன்னதியில் வைத்து வழிபடவே இங்கு வந்தேன். 10 வருடத்துக்கு பிறகு முதல்முறையாக இப்போது தான் இங்கு வருகிறேன்.
கங்கா ஆரத்தியின் போது நான் இங்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். கோயில் மிகவும் நன்றாக இருக்கிறது... இங்கே உள்ள தெய்வீக சக்தியை என்னால் உணர முடிகிறது.. மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்து மரபுப்படி கடவுளின் ஆசிர்வாதத்தை நாடுகிறோம்... திருமணத்திற்கு கடவுளை அழைக்க நாடி வந்துள்ளோம்" என்றார்..
சாமி தரிசனம்: சாமி தரிசனத்தை முடித்து கொண்ட நீடா, அங்குள்ள சாலையில் இருந்த டிபன் கடைக்குள் நுழைந்தார்.. அம்பானி மனைவியை அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்..
டிபன் கடைக்கு வந்த நீடா, அங்கிருந்த மக்களுடன் அமர்ந்து சேர்ந்து சாப்பிட்டார். உருளைக்கிழங்கு மசாலாவில் செய்யப்பட்ட டிபனை வாங்கி சாப்பிட்ட நீடாவுக்கு அதன் ருசி மிகவும் பிடித்துவிட்டது. அதனால், அந்த சமையலின் பக்குவம், ருசி, உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி தயாரிப்பது? என்பது குறித்தெல்லாம் டிபன்கடை ஊழியர்களுடன் விரிவாக பேசினார்.. இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் 2 நாட்களாகவே சுற்றிக்கொண்டிருக்கிறது.
வளாகம்: அதுபோலவே, பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியாவுக்கென தனி இல்லம் (India House) அமைக்கப்படவுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை அமைக்கிறது. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நீடா அம்பானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீடா அம்பானி, இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகவும் உள்ளார்.. தற்போது, இந்தியா இல்லத்தை பாரிஸ் ஒலிம்பிக் வளாகத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்திருப்பதால், பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.












Click it and Unblock the Notifications