ஒரு வேளைக்கு ரூ 3 லட்சத்தில் டீ குடிக்கும் நீடா அம்பானி.. மகன் நிச்சயத்தில் செய்த காரியம் தெரியுமா?
ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்ததில் நீடா அம்பானி செய்த செயல் அனைவருக்கும் பாடமாக அமைந்துள்ளது
மும்பை: தனது மகன் ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தத்தில் அவரது தாய் நீடா அம்பானி செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ளவர் முகேஷ் அம்பானி. இன்டர்நேஷனல் கோடீஸ்வரர்களுக்கு இணையாக இவர் வளர்ந்து வருகிறார். ஆசியாவில் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் இவர் ஆவார்.
இவருடைய மனைவி நீடா அம்பானி. இவர்களுக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற மகன்களும் ஈஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். ஆகாஷும் ஈஷாவும் இரட்டை பிறவிகள். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்கள் அண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்கள்.

திருமணம்
இந்த திருமணத்தில் மணமகள் ராதிகா மெர்சன்ட் அணிந்திருந்த உடையின் விலை ரூ 3 லட்சமாகும். இந்த ஆடைக்கு மேட்சிங்காக வைர அட்டிகை உள்ளிட்ட நகைகளை அணிந்திருந்தார். முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தங்க நிறத்தில் லெஹங்கா அணிந்திருந்தார். அதில் ஜர்தோஷி மற்றும் சிகான்கரி எம்பிராய்டரிங் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

படோலா சில்க்
படோலா சில்க் அணிந்திருந்தார். ஆரஞ்ச் நிறத்தில் ஜாக்கெட்டும் துப்பட்டாவும் அணிந்திருந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் யங்காக தெரிந்தார். விழாவுக்கு வந்த அனைவருக்கும் நீடா அம்பானி அணிந்திருந்த நெக்லஸ் மீதுதான் கண்ணாக இருந்தது. பல்வேறு அடுக்குகளை கொண்ட அந்த நெக்லஸ் உயர் தர வைரக் கற்களால் ஆனது. இந்த நெக்லஸில் ஒரு ஸ்பெஷல் உள்ளது.

பணக்காரரின் மனைவி
இந்திய பெரும் பணக்காரரின் மனைவி வைரக் கற்கள் பதிந்த நெக்லஸை அணிந்திருப்பதில் என்ன ஆச்சரியம் என கேட்கலாம். இந்த நெக்லஸை அவர் ஏற்கெனவே அணிந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாகும். ஏற்கெனவே மகள் ஈஷா அம்பானியின் திருமணத்தின் போது இந்த நெக்லஸை நீடா அம்பானி அணிந்திருந்தார். அதே நெக்லஸை பாரம்பரியம் மாற்றாமல் மகனின் நிச்சயதார்த்தத்திலும் நீடா அம்பானி அணிந்திருந்தார்.

ஆச்சரியம்
இது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. சாதாரணமாக எண்ணக் கூடிய அளவுக்கு நகைகளை வைத்திருப்போர் கூட ஒரே நகையை எல்லார் வீட்டு திருமணங்களுக்கும் போட்டு செல்வதா என சலித்துக் கொள்கிறார்கள். அது போல் போட்ட உடையை கூட மற்றொரு நிகழ்வில் போட கூடாது என கருதுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீடா அம்பானியின் செயல் பாடத்தை கற்றுக் கொடுத்தது போல் இருக்கிறது. நீடா நினைத்திருந்தால் அந்த நெக்லஸை விட 100 மடங்கு விலை மதிப்புள்ள நெக்லஸை வாங்கியிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அந்த நெக்லஸ் பாரம்பரியமிக்கது என்கிறார்கள்.

நீடா அம்பானி
நீடா அம்பானி தான் போட்டிருந்த நெக்லஸ் பழையது என கண்டுபிடிக்க முடியாதபடி தனது ஆடையுடன் அழகாக அணிந்திருந்தார். நீடா அம்பானி காலையில் குடிக்கும் டீயின் விலை ரூ 3 லட்சமாகும். மிகவும் உயர்ந்த ரக தேயிலையை கொண்டு இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது. இப்படி காலையில் குடிக்கும் டீயையே விலை உயர்ந்ததாக குடிக்கும் நீடா பழைய நகையை போட்டிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஈஷா அம்பானிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பிராமல் குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்தை ஈஷா மணந்துள்ளார். ஈஷா அம்பானியின் திருமணத்திற்கு ரூ 700 கோடி செலவிடப்பட்டதாக தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications