Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் பதவியில் 50: 50.. அமித்ஷாவுக்கு கடைசி நேரத்தில் நெருக்கடி தரும் சிவசேனா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    BJP plan to keep CM post for next 5 years too

    மும்பை: புதிய அரசு அமைய வேண்டுமெனில் மகாராஷ்டிரத்தில் முதல்வர் பதவியை பாஜகவும் சிவசேனாவும் சரி சமமாக பிரித்துக் கொள்வது என அமித்ஷா எழுதிக் கொடுக்க வேண்டும் என அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

    மகாராஷ்டிரத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவுடன் மாநில கட்சியான சிவசேனா கூட்டணி வைத்தது. இதில் பாஜக 122 இடங்களிலும் சிவசேனா 63 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    இதையடுத்து மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது. எனினும் கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவும் சிவசேனையும் எலியும் பூனையுமாகவே இருந்தன. இதனால் இந்த முறை கூட்டணி அமையாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி வைத்தனர்.

    17 இடங்கள் பறி போனது

    17 இடங்கள் பறி போனது

    இந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனை 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த இரு தேர்தல்களிலும் பாஜக கடந்த முறையை காட்டிலும் 17 இடங்களை கோட்டை விட்டுள்ளது.

    ஆட்சி அமைக்க

    ஆட்சி அமைக்க

    அது போல் சிவசேனை கட்சியும் 7 இடங்களை பறி கொடுத்துவிட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இதனால் பாஜக மாநில கட்சியின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    உத்தவ் தாக்கரே

    உத்தவ் தாக்கரே

    இதை நன்கு உணர்ந்த சிவசேனா, தேர்தல் முடிவுகள் வந்து இரு தினங்களுக்கு பிறகு பாஜகவின் கழுத்தை அறுக்கும் செயலில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனை கட்சி எம்எல்ஏக்களும் உத்தவ் தாக்கரேவும் இன்று ஆலோசனை நடத்தினர்.

    கட்சி ஆட்சி செய்ய

    கட்சி ஆட்சி செய்ய

    அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சிவசேனா கட்சி எம்எல்ஏ பிரதாப் சர்நாயக் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியை இரு கட்சிகளும் சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும். அதாவது பாஜக இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்தால் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் எங்கள் கட்சி ஆட்சி செய்ய வேண்டும்.

    இதுதான் நேரம்

    இதுதான் நேரம்

    முதல்வர் பதவியை இரு கட்சிகளும் சரிசமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும். இதை ஏற்று அமித்ஷாவோ தேவேந்திர பட்நவீஸோ கையெழுத்து போட்டு கொடுத்தால் மட்டுமே புதிய ஆட்சி அமையும். தேர்தலுக்கு முன்பு பாஜக ஒப்புக் கொண்டபடி நடந்து கொள்ள வேண்டிய நேரமிது.

    வேறு முடிவுகள்

    வேறு முடிவுகள்

    ஆதித்ய தாக்கரேவை அடுத்த முதல்வராக்க நாங்கள் விரும்புகிறோம். எனினும் இதுகுறித்து உத்தவ் தாக்கரேதான் இறுதி முடிவை எடுப்பார். ஒரு வேளை பாஜக எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் வேறு முடிவுகளை எடுப்போம் என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+