Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பையில் பிச்சை எடுத்தே பல கோடி சேர்த்த நபர்.. கான்வென்டில் படிக்கும் பிள்ளைகள்.. ஆடம்பர பிளாட் வேற

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு பல கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாம். மும்பையில் மிகவும் ஆடம்பரமான பிளாட் ஒன்றில் வசித்து வரும் இவரது சொத்து மதிப்பு மட்டும் இல்லை தினசரி வருமானமே பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

பிச்சை எடுத்து பெரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டதாக சில சினிமாக்களில் நகைச்சுவை காட்சியாக காட்டப்பட்டு இருக்கும். விவேக்கிடம் கூட பிச்சைகாரராக நடித்து இருக்கும்... தனக்கு பல வங்கிகளில் அக்கவுண்ட்கள் இருப்பதாக கூறுவார். நாள் முழுக்க வேலை செய்தாலும் நம்மிடம் கூட இவ்வளவு பணம் இல்லையே.. ஆனால் பிச்சை எடுத்தால் இவ்வளவு பணம் கிடைக்கிறதா? என விவேக் கலாய்க்கும் வகையில் அந்தகாட்சி அமைந்து இருக்கும்.

One of the Richest beggar of the world: Mumbai Man earn more than Rs 2000 in a day

இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் சினிமாவில் மட்டும் இல்லை நிஜத்திலும் நடக்கிறது என்பதை அவ்வப்போது வெளியாகும் சில செய்திகள் காட்டுவதாக இருக்கும். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சி.எஸ்.எம்.டி ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த ஒருவர் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். அது மட்டும் இல்லை.. மும்பையில் அவருக்கு சொந்தமாக ரூ.1.2 கோடி மதிப்புள்ள பிளாட் ஒன்றும் உள்ளதாம்.

மும்பையில் சொந்தமாக விலையுர்ந்த வீடுகள்: தானேயில் இரண்டு கடைகளை வாடகைக்கும் விட்டுள்ளாராம். என்னது இப்பவே தலைசுற்றும் வகையில் இருக்கிறதா... இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம். நாட்டின் நிதி தலைநகரான மும்பை எங்கு பார்த்தாலும் பரபரப்பாகத்தான் காண முடியும். அதிலும் ரயில், பேருந்து நிலையங்களை பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம். பரபரப்பான நேரங்களில் மும்பையில் உள்ள பிரதான ரயில் நிலையங்களில் திரும்பும் திசை எல்லாம் பயணிகள் கூட்டமாகத்தான் இருக்கும்.

இந்த கூட்டத்திற்கு மத்தியிலும் பலரும் பிச்சை எடுப்பதை பார்க்க முடியும். ரயில் நிலையங்களில் வரிசையாக பிச்சைக்காரர்கள் அமர்ந்து இருப்பார்கள். இவர்களை தாண்டித்தான் செல்வது போல இருக்கும். இந்த வரிசையில் நின்று பிச்சை எடுத்தே ஒருவர் பல கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார் . அந்த பிச்சை எடுக்கும் நபர் பரத் ஜெயின் என அடையாளம் காணப்பட்டது. பொருளாதார ரீதியாக மும்பையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

பரத் ஜெயின் மும்பையில் விலையுர்ந்த வீடுகள் சொந்தமாக்கி வைத்து உள்ளார். இவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ.7 கோடியே 50 லட்சம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் 10 மணி முதல் 12 மணி நேரம் பிச்சை எடுத்து ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறாராம். இவரது குழந்தைகள் கான்வென்ட் பள்ளியில் படித்து வருகிறார்கள். அது மட்டும் இன்றி மும்பையில் இரண்டு பிஎச்.கே பிளாட் வீடும் வைத்து இருக்கிறார்.

நெட்டிசன்கள் ஆச்சர்யம்: இதன் மதிப்பு மட்டும் 1.20 கோடி. தானேயில் இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளாராம். அதிலும் அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் மாத வருமானமாக கிடைத்து வருகிறது. இவ்வளவு வசதி வாய்ப்புகள் பெற்றாலும் இன்னமும் பிச்சை எடுத்தே வருகிறாராம். இந்த கோடீஸ்வர பிச்சைக்காரரான பரத் ஜெயின் பற்றிய செய்திகள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நாள் முழுக்க ஓய்வு இல்லாமல் உழைத்தால் கூட சில நூறுகளே சம்பாதித்து கஷ்டப்படும் எத்தனையோ நபர்களை காண முடிகிறது. ஆனால், ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் இருந்த இடத்தில் இருந்து பிச்சை மட்டுமே எடுத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து கோடிகளில் புரளும் இந்த பிச்சைக்காரர் செய்தியை கேட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரித்தான பாணியில் கிண்டலும் கேலியுமாக பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+