"ஆபரேஷன் சிந்தூர்" அதுக்குள்ள போஸ்டர் ரிலீஸ் பண்ணிட்டாங்க.. கொதித்த ரசிகர்கள்.. இயக்குநர் மன்னிப்பு!
மும்பை: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நிலவி அதிகரித்து வரும் சூழலில், பாலிவுட்டின் இயக்குநர் உத்தம் மகேஷ்வர் என்பவர் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற தலைப்பில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதில் போர்க்களத்தின் நடுவில் பெண் ஒருவர் நின்று கொண்டு தனது நெற்றியில் குங்கமம் வைப்பது போலவும், பின்னர் போர் விமானங்கள், பீரங்கிகள் வைத்து சண்டை நடப்பது போலவும் காட்சி இடம்பெற்றுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சூழலில், சர்வதேச அளவில் விவாதம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் என்று 9 இடங்களை இந்தியா தாக்கி பதிலடி கொடுத்தது.

இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது. இந்தியன் ஆர்மியின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும் அதற்கு ஏற்ப தக்க பதிலடியை கொடுத்து வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையில் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மத்திய அரசு தரப்பில் பாகிஸ்தானின் அத்துமீறல்கள், இந்தியாவின் பதிலடிகளை வெளிப்படையாக விளக்கம் கொடுத்து வருகிறது. இதுவொரு பக்கம் இருக்க, பாலிவுட் சினிமாவில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பை பெறுவதற்கு பலரும் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகியது.
பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று 30க்கும் அதிகமானோர் ஆபரேஷன் சிந்தூர் தலைப்பை கோரி விண்ணப்பித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் உத்தம் மகேஸ்வரி என்பவர், தனது சோசியல் மீடியா பக்கத்தில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் திரைப்படம் எடுக்க போவதாக அறிவிப்பை வெளியிட்டு போஸ்டரையும் ரிலீஸ் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நிக்கி விக்கி பாக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கண்டெண்ட் இன்ஜினியர் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் போர்க்களத்திற்கு நடுவில் ஒரு பெண் நின்று கொண்டு தனது நெற்றியில் குங்குமம் இடுவதாகவும், அவருக்கு பின்னால் போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் போரிடுவதை போலவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் கொந்தளித்தனர். மற்றவர்களின் உணர்வுகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், இதிலும் வருவாய் ஈட்ட முயற்சிப்பதாக திட்ட தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து இயக்குநர் உத்தம் மகேஸ்வர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில், ஆபரேஷன் சிந்தூர் போஸ்டரை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது எங்களின் நோக்கமல்ல. ஒரு இயக்குநராக ராணுவ வீரர்களின் தைரியம், தியாகத்தால் நெகிழ்ச்சியடைந்தேன். இந்த கதையை திரைக்கு கொண்டு வர விரும்பினேன். இது வெறும் புகழ் மற்றும் பணத்திற்காக செய்யப்பட்டதல்ல என்று கூறியுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications