மோடிக்கு எதிராக வாக்னர் குழு.. உத்தவ் தாக்கரே சொன்னதை நோட் பண்ணீங்களா!
மும்பை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், மோடிக்கு சவால் அளிக்க எதிர்க்கட்சிகள் பீகாரில் வாக்னர் குழு போல ஒன்று கூடியிருக்கிறது என்று சிவசேனாவின் சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்கு அடித்தளம் அமைக்கும் விதமாக பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிஷ் குமார், ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா, தமிழக முஹ்டல்வர் மு.க. ஸ்டாலின், சிவசேனா (பாலாசாகேப் உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக போட்டியிடுவதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தினர். சிம்லாவில் வரும் ஜூலை மாதம் 10-12 -ம் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ஓரணியில் மோடியை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருவதை உத்தவ் தாக்கரே, ரஷ்யாவில் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவிடம் ஒப்பிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவரது கட்சி பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மோடி - அமித்ஷா இணைந்து பெரிய எண்ணிக்கையில் வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வெற்றியை உறுதி செய்ய பெரிய எண்ணிக்கையில் கூலிப்படையை தயார் செய்துள்ளனர். மோடிக்கு சவால் அளிக்க எதிர்க்கட்சிகள் பீகாரில் வாக்னர் குழு போல ஒன்று கூடியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் சிறையில் குற்றவாளிகளாக இருப்பவர்களையும் சேர்த்து கூலிப்படை அமைப்பு போல செயல்பட்டு வரும் வாக்னர் குழுவுடன் எதிர்க்கட்சிகள் கூட்டணியை சாம்னா ஒப்பிட்டு இருப்பது வினோதமாக அமைந்துள்ளது. முன்னதாக நேற்று உத்தவ் தாக்கரே கட்சி கூட்டத்தில் பேசுகையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நான் மெகபூபா முப்தி பக்கத்தில் அமர்ந்தது பற்றி பாஜக விமர்சிக்கிறது.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நான் வேண்டுமென்றே தான் மெகபூபா முப்தி அருகில் போய் அமர்ந்தேன். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்படாது என்ற நிபந்தனையுடன் பாஜக தங்களுடன் கூட்டணி அமைத்ததாக மெகபூபா முப்தி என்னிடம் கூறினார். நீங்கள் மெகபூபாவுடன் கூட்டணி அமைத்த போதே இந்துத்வாவை விட்டு வெளியேறியுள்ளனர். உங்கள் போலி இந்துத்வா முகத்திரையை கிழிப்போம்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications