மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    MUMBAI RAIN | மும்பை மழை.. சாலைகளில் வெள்ளம்..விமானங்கள் ரத்து.. போக்குவரத்து பாதிப்பு- வீடியோ

    மும்பை: மும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த சில நாட்களாக மழை ஓய்வு எடுத்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை விட்டு விட்டு மழை பெய்தது. இதையடுத்து மாலை நேரத்தில் மழை பின்னி பெடலெடுத்துவிட்டது.

    மின்சார ரயில்கள்

    மின்சார ரயில்கள்

    நேற்று மாலை 5 மணி முதல் மும்பை நகரம் முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. கனமழையின் காரணமாக மாலை நேரத்தில் மின்சார ரயில்களும் தாமதமாகின.

    மழை

    மழை

    பணி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மும்பை, தானே, நவிமும்பை பகுதியில் பலத்த மழை பெய்தது.

    மிக மிக கனமழை

    மிக மிக கனமழை

    இந்நிலையில் இன்றும் சனிக்கிழமை மும்பையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய 3 மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை

    கனமழை

    இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது தானே மாவட்டத்திலும் , பால்கர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    IMD issues Orange Alert to 3 districts of Mumbai City as expects today will get more rains.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X