ஹிஜாப் அணிந்த பெண்.. இந்தியாவின் பிரதமராவார்! ஆருடம் சொன்ன அசாதுதீன் ஓவைசி! பாஜக பயங்கர ரியாக்ஷன்
மும்பை: இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது பரப்பப்படும் வெறுப்பு அரசியல் முடிவுக்கு வரும் என்றும், ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார் என்றும் அசாதுதீன் ஓவைசி கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
மகாராஷ்டிராவின் சோலாப்பூரில், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் மேலும் பேசியதாவது, "பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே நாட்டின் பிரதமர் அல்லது தலைவராக முடியும் என்று கூறுகிறது. ஆனால், இந்தியாவில் அப்படி கிடையாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்த நமது அரசியலமைப்பு, எந்தவொரு குடிமகனும் பிரதமர், மாநில முதல்வர் அல்லது மேயர் கூட ஆகலாம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.

நானும் இன்றைய தலைமுறையும் இல்லாத ஒரு நாள் வரும். இறைவனின் அருளால், அன்று ஒரு ஹிஜாப் அணிந்த மகள் இந்தியாவின் பிரதமராக ஆவார். முஸ்லிம்களுக்கு எதிராக நீங்கள் பரப்பும் வெறுப்பு நீடிக்காது என நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பாஜக தலைவர்கள் கடுமையாக ரியாக்ஷன் செய்திருக்கிறார்கள். பாஜக எம்.பி. அனில் போண்டே, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது அடிமைத்தனம் எனவும், அதை யாரும் விரும்பாததால் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் எனவும் தெரிவித்தார். ஈரானில் பெண்கள் இந்த நடைமுறைக்கு எதிராகப் போராடி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் மக்கள் தொகை சமநிலையற்ற தன்மை அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்த போண்டே, இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேபோல பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, "ஹிஜாப் அணிந்த பெண் பிரதமர் ஆவார் என்று ஓவைசி கூறுகிறார். ஓவைசி, அரசியலமைப்புச் சட்டம் யாரையும் தடுக்கவில்லை, ஆனால் நீங்கள் முதலில் ஒரு பஸ்மண்டா முஸ்லிமையோ அல்லது ஹிஜாப் அணிந்த ஒரு பெண்ணையோ உங்கள் கட்சியின் தலைவராக்குங்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications