மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கதறி அழுதாரா பிரபல பெண் அரசியல்வாதி பங்கஜ் முண்டே.. வைரல் போட்டோ.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    வைரல் போட்டோ.. பின்னணி என்ன?

    மும்பை: தேர்தலில் தோற்றதால் பாஜகவின் மூத்த தலைவரான, முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகளும், அம்மாநில அமைச்சராக இருந்தவருமான பங்கஜ் முண்டே கதறி அழுததாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பார்லி தொகுதியில் போட்டியிட்டார் பங்கஜ் முண்டே. இதே தொகுதியில் போட்டியிட்ட, அவரின் நெருங்கிய உறவுக்காரரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தனஞ்சய் முண்டேயிடம், தோல்வியடைந்தார்.

    இந்த தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், பங்கஜ் முண்டே டிவி சேனல் ஒன்றின் மைக் முன்பாக நின்றபடி கதறி அழுவது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    மும்பை மெட்ரோபாலிட்டனில் நாங்கதான் கிங்.. பாஜக, சிவசேனா அசத்தல்.. என்ன காரணம்?மும்பை மெட்ரோபாலிட்டனில் நாங்கதான் கிங்.. பாஜக, சிவசேனா அசத்தல்.. என்ன காரணம்?

    போலி

    போலி

    இது தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள ஊடகங்களிலும் ஒளிபரப்பும் செய்யப்பட்டது. ஆனால் இந்த புகைப்படம் தவறான போட்டோ என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பங்கஜ் முண்டேவும் கூட இந்த போட்டோ போலியானது என உறுதிப்படுத்தியுள்ளார்.

    டிவியில் பேசினார்

    டிவியில் பேசினார்

    தேர்தலுக்கு முன்பாக குறிப்பிட்ட டிவி சேனலுக்கு பங்கஜ் முண்டே அளித்த பேட்டியின்போது, தனது உறவினரான தனஞ்செய், தன்னைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்ததாக கூறி முறையிட்டார் பங்கஜ் முண்டே.

    டிவி பேட்டி

    டிவி பேட்டி

    அந்த பேட்டியில் கூட அவர் அழவில்லை. அவரது முகம் உணர்ச்சிகரமாக, அது போன்ற தோற்றத்தில் இருந்தது. அதை யாரோ ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தேர்தல் தோல்வியால் பங்கஜ் அழுததை போல சித்தரித்து விட்டனர். நாடு முழுக்க உள்ள முன்னணி ஊடகங்களும் கூட இதை சோதித்துப் பார்க்காமல் செய்தி ஒளிபரப்பி விட்டன.

    போலி செய்திகள்

    போலி செய்திகள்

    இப்போது இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவித்துள்ளன. ஆக மொத்தம் இணையம் இருந்தால் போதும் யாரைப் பற்றியும் நொடிப் பொழுதில் போலி செய்திகளை பரப்பி விடலாம் என்பதற்கு பங்கஜ் முண்டே சம்பவம் லேட்டஸ்ட் உதாரணமாக மாறியுள்ளது.

    English summary
    Pankaja Munde breaks down photo is fake, her screen shot used wrongly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X