என்னாது.. சுஷாந்த் ஆவி தனியா இல்லையா.. கூட இன்னொருத்தர் இருக்காரா.. பீதி கிளப்பும் ஆவி ஸ்பெஷலிஸ்ட்!
மும்பை: அமானுஷ்யங்களுடன் பேசும் நிபுணரான ஸ்டீவ் ஹஃப் அண்மையில் இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆவியுடன் பேசியதாக தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் என்ற பாலிவுட் நடிகர் தோனியாக நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். அவர் கேதார்நாத் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சிறிய வயது என்றாலும் திறமை அதிகம் என்பதால் இவர் பல்வேறு திரை நட்சத்திரங்களுக்கு மத்தியில் பிரகாசமாக ஜொலித்தார்.
இவருக்கு குறுகிய காலத்திலேயே நிறைய ரசிகர்கள். இவரை தோனியாகவே பார்த்தவர்கள் ஏராளம். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் தனது மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை அல்ல
பணம், புகழ், திரை வாய்ப்புகள், திறமை என இத்தனை இருந்தும் சுஷாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துவிட்டது. இவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அவர் கழுத்தில் கயிறு போன்ற ஒரு பொருள் நெரித்தே இறந்தார் என்றும் அவரது மரணம் கொலை அல்ல, தற்கொலைதான் என்றும் கூறப்பட்டது.

ஆவி
அவரது வீட்டில் தற்கொலை கடிதங்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் அவர் ஏன் இறந்தார் என்பது குறித்து தெரிந்து கொள்ள விரும்பினர். இதற்காக அமானுஷ்யங்களுடன் பேசும் நிபுணரான ஸ்டீவ் ஹஃப்பிற்கு ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு சுஷாந்த் ஆவியுடன் பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.

வழிகாட்டும் பெண்
இதையடுத்து ஸ்டீவும் கடந்த ஜூலை 13-ஆம் தேதி சுஷாந்த் ஆவியுடன் பேசி அதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளார். சுமார் 11 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோவில் ஆவியுடன் பேசும் கருவியை கொண்டு சுஷாந்த் சிங்கை ஸ்டீவ் தொடர்பு கொள்ள முயற்சித்தார். அப்போது சுஷாந்த் சிங் உணர்ந்த ஸ்டீவ், அவர் தனியாக இல்லை என்பதையும் பெண் ஒருவர் வழிகாட்டுவதையும் உணர்ந்தார்.

திறமை
இதுகுறித்து ஸ்டீவ் கூறுகையில், இன்று நான் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளேன். சுஷாந்தின் ஆவி என்னுள் வந்ததது மட்டும் அல்லாமல் அதனுடன் நான் நேரடியாக பேசினேன். அவர் தன்னுடன் ஒருவரை அழைத்து வந்தார். இவர் பேசுவதற்கு உதவ யாரோ திறமையானவரும் உடனிருந்தார். இங்கு யாரும் உதவி புரிவோர் இல்லாததால் சுஷாந்தே அழைத்து வந்தார்.
Recommended Video

தாய்
மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த வீடியோவை ரெக்காடு செய்யும் போது அந்த அறை முழுவதும் அளவு கடந்த அன்பு நிரம்பியிருந்தது. இன்னும் ஏராளமான கேள்விகளுடன் மீண்டும் ஒருமுறை அவரிடம் பேசுவேன் என்றார் ஸ்டீவ். ஒரு வேளை சுஷாந்துடன் இருக்கும் பெண் அவரது தாயாக இருக்கலாம் என தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆவிகளுடன் பேசி வருகிறார். இவர் பேட்ரிக் சூயஸ், மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோரின் ஆவிகளுடன் பேசியுள்ளார். ஆவிகளுடன் ஒலியை கேட்க இவர் தனியாக ஒரு கருவியையும் வடிவமைத்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications