Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் இயற்கை! மனிதன் போட்ட குப்பைகளை திருப்பி கொடுத்த "கடல்".. மலை போல் ஒதுங்கிய பிளாஸ்டிக்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் நாட்டின் நிதி தலைநகரான மும்பை கடற்கரை அசுத்தமாக காட்சி தரும் வீடியோ ஒன்று டுவிட்டரில் பரவி வருகிறது. எனினும் மும்பை மாநகராட்சியினர் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் கடற்கரை மீண்டும் தூய்மையாக காட்சியளிக்கிறது.

கடல் என்றாலே பலருக்கும் தனி புத்துணர்ச்சி ஏற்படும். அடுத்தடுத்து படையெடுத்து வரும் அலைகளும் ஓயாத அதன் பேரிரைச்சலும் மனதுக்கு புது தெம்பை ஊட்டும்.

குறிப்பாக சென்னை, மும்பை போன்ற நகரத்தில் வசிக்கும் மக்களின் பிரதான சுற்றுலத்தளமாக விளங்குவது கடற்கரை என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு வார விடுமுறை நாட்களில் கடற்கரையோரம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

 சமூக ஆர்வலர்கள் வேதனை

சமூக ஆர்வலர்கள் வேதனை

இப்படி கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட கடற்கரையும் சமீப காலமாக மக்கள் வீசி எறியும் குப்பைகளால் அசுத்தம் ஆகி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் திறந்த குப்பை வெளி போன்று பல இடங்களில் கடலை மக்கள் கையாள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கடலை அசுத்தப்படுத்தக்கூடாது என்று எவ்வளவோ எச்சரிக்கைகள் விடுத்தாலும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டாலும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தபாடில்லை.

 மலை போல் தேங்கிய குப்பைகள்

மலை போல் தேங்கிய குப்பைகள்

அதை மெய்ப்பிக்கும் வகையில்தான் சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. மும்பையின் மகிமா கடற்கரையில் மலை போல பிளாஸ்டிக் குப்பைகளை கடல் அலை ஒதுக்கியுள்ளது. இது கடற்கரையோரம் அப்படியே கிடக்கிறது. இந்த குப்பை குவியல்களுக்கு மத்தியிலும் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் மக்கள் அப்படியே செல்பி எடுத்துக்கொள்வதுதான் அவலத்தின் உச்சம். பிளாஸ்டிக் குப்பைகளை கண்டு சிலர் முகம் சுளிக்காமலும் இல்லை. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தான் தற்போது டுவிட்டரில் தீயாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கோபத்தை கமெண்டுகளில் கொட்டி தீர்த்துள்ளனர்.

 நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து


இந்த வீடியோ குறித்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில், 'இதை பார்க்கும் போது அனைவரும் இறந்து விடுவோம்.. பிளாஸ்டிக் மட்டுமே பூமியில் எஞ்சி இருக்கும் போல் தெரிகிறது' என பதிவிட்டுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் பதிவிட்டுள்ள கமெண்டில், 'முதலில் இயற்கை எச்சரிக்கும், அதற்கு எந்த விளைவும் இல்லை என்றால், அது தனது வேலையை காட்டும். எனவே, இயற்கை செயல்படும் வரை காத்திருக்கக்கூடாது. ஏனெனில், இயற்கை அதன் சுய ரூபத்தை காட்டினால் நாம் தாங்க மாட்டோம்' என்று பதிவிட்டுள்ளார்.
மற்றுமொரு நெட்டிசன் வெளியிட்ட கருத்தில், 'நமது கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க நாமும் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இயற்கையுடன் ஒரு போதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஏனெனில், இயற்கை தக்க பதிலடி கொடுத்து விடும். கடல் ஒருபோதும் அழுக்கை தன்னுடன் வைத்திருக்காது" என்று கூறியுள்ளார்.

 சுத்தப்படுத்திய மாநகராட்சி

சுத்தப்படுத்திய மாநகராட்சி

இவ்வாறாக இந்த வீடியோ டுவிட்டரில் டிரெண்ட் ஆக மறுபுறம் வீடியோவை பார்த்த மும்பை மாநகராட்சி தனது சார்பு விளக்கத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், மக்கள் தேவையற்ற பொருட்களை கால்வாய்கள், ஆறுகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும். இப்படி வீசும் பொருட்கள் கடலில் தான் போய் சேரும். மும்பை மாநகராட்சி தொடர்ச்சியாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. தற்போது கடற்கரை சுத்தமாக இருப்பதையும் பாருங்கள் எனப்பதிவிட்டு அந்த புகைப்படத்தையும், இணையத்தில் பரவி வந்த குப்பையாய் காட்சியளித்த கடற்கரை படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது. இந்த பதிவினை பலர் லைக் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+