‛‛வாரிசு அரசியலை ஒழிக்கனும்’’.. இளைஞர்களே இதை செய்யுங்க! மோடி கூறிய பாயிண்ட்.. திரும்பும் கட்சிகள்
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி வருகிறார். இந்நிலையில் தான் வாரிசு அரசியலை நீர்த்துப்போக செய்ய இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி முக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் மிகப்பெரிய நீளமான கடல் மேம்பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் கடல் மேல் கட்டப்பட்டுள்ள 22 கிலோமீட்டர் தூர பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். முன்னதாக பிரதமர் மோடி நாசிக்கில் 27 வது தேசிய இளைஞர் விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும் வாரிசு அரசியலை இளைஞர்கள் நீர்த்துப்போக செய்ய வேண்டும் என கூறினார். மேலும் அதற்கான ஐடியாவையும் பிரதமர் மோடி கூறினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா என்பது ஜனநாயகத்தின் தாய். இதை உலகம் அறிந்து வைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கை நமக்கு தெளிவாக தெரிகறிது. இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். ஜனநாயகத்தின் ஒருபகுதியாக இளைஞர்கள் உள்ளதால் நாட்டின் எதிர்காலம் என்பது வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நாட்டை திறம்பட கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும். அதோடு வாரிசு அரசியலை நீர்த்துப்போக செய்ய வேண்டும். வாரிசு, குடும்ப அரசியல் என்பது நாட்டுக்கு கேடானது. இதனை நீர்த்துப்போக செய்யும்படி இளைஞர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். இளைஞர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இளைஞர்கள் தங்கள் அரசியல் பார்வையை வெளிப்படுத்தினால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
ஜனநாயக நடைமுறையில் இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும். முதல் முறை வாக்காளர்கள் இந்திய ஜனநாயகத்திற்கு புதிய சக்தி, ஆற்றலை கொண்டு வருகின்றனர். இன்றைய இந்தியா என்பது இளைஞர் மனநிலையில் உள்ளது. நாட்டில் இளைஞர்கள் பின்தங்காமல் முன்னணியில் உள்ளனர். தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.
இந்திய வரலாற்றில் உங்களை மிகவம் அதிர்ஷ்டசாலியான தலைமுறையாக நான் கருதுகிறேன். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை வழங்கி உள்ளோம். பல்வேறு தடைகளை அகற்றியுள்ளோம். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் நாட்டின் இளைஞர்களுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது
இளம் தலைமுறையினர் தங்களது சிறகை விரித்து பறக்க வேண்டிய நேரம் இது. சவால்களை சந்தித்து வெற்றி கொள்ள வேண்டிய காலம் இது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் இலக்குகளை பட்டியலிட்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற வேண்டும். உற்பத்தியின் மையமாக இந்தியா இருக்க முயற்சிக்க வேண்டும்'' என பேசினார்.
மேலும் மகாத்மா ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரி புலே, பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், படுகேஷ்வர் தத், மேஜர் தியான் சந்த், எம் விஸ்வேஸ்வரய்யா உள்ளிட்டோர் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக் உள்பட பலர் பங்கேற்றனர்.
-
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications