Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலி மட்டுமல்ல.. கோவில் நகைகளுக்கும் குறிவைத்துள்ள காங்கிரஸ்! மீண்டும் பிரதமர் மோடி புதுக்குண்டு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது மாவோயிஸ்ட் தேர்தல் அறிக்கை எனவும், காங்கிரஸ் கட்சி பெண்களின் தாலி மட்டுமின்றி கோவில்களில் உள்ள தங்கத்தின் மீதும் கண்வைத்துள்ளது என்றும் பிரதமர் மோடி நேற்று நடந்த மும்பை பொதுக்கூட்டத்தில் பரபரப்பாக பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். மறுபுறம் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசனோ மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுள்ளது.

PM Modi criticizes congress manifesto he claimed its eyeing gold from temples and mangalsutra

மகாராஷ்டிராவில் தற்போது வரை மொத்தம் 35 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் 13 தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் தேதியான மட்டும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி நேற்று மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கட்சி பெண்களின் தாலியை பறிக்க திட்டமிட்டுள்ளதாக மேடைகள் தோறும் பேசி வரும் பிரதமர் மோடி மும்பையில் புதிய குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை கிளப்பினார். அதோடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மாவோயிஸ்ட் தேர்தல் அறிக்கை என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மகாத்மா காந்தியின் விருப்பப்படி சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சி முன்பே கலைக்கப்பட்டு இருந்தால் நம் நாடு இப்போது இருப்பதை விட 50 ஆண்டு பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் முன்னேறி இருக்கும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உயிர்பிழைக்க போராடி வருகிறது. கட்சியை காப்பாற்றவும் முயற்சிக்கிறது. அந்த கட்சியின் மாவோயிஸ்ட் தேர்தல் அறிக்கை என்பது கோவில்களில் உள்ள தங்கம் மற்றும் பெண்களின் தாலி மீது கண்வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது மாவோயிஸ்ட் தேர்தல் அறிக்கை. இந்த தேர்தல் அறிக்கையால் நாட்டின் பொருளாதா வளர்ச்சி என்பது கடுமையாக பாதிக்கப்பட்டு திவால் நிலைக்கு செல்லலாம். மேலும் 1980களில் ரத்து செய்யப்பட்ட பரம்பரை வரியை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. 50 சதவீதம் வரை பரம்பரி வரி விதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் உங்களின் (பொதுமக்கள்) சொத்துகளை தங்களின் வாக்கு வங்கிக்கு (மறைமுகமாக இஸ்லாமியர்களை) வழங்க உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்குவது சாத்தியமாகாது என முன்னொரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால் இப்போது அது நிஜமாகிவிட்டது. உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டால் தான் இது சாத்தியமானது. கடந்த 10 ஆண்டுகளாக மும்பை மக்களான நீங்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஆனால் மே 20ம் தேதி ஓட்டளிக்க செல்லும்போது மும்பையின் முந்தைய பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் தொடர் குண்டுவெடிப்புகளையும், 2014ல் பாஜக ஆட்சிக்கு பிறகு மும்பை நகரம் அமைதியாக மாற்றப்பட்டதை நினைத்து ஓட்டளிக்க வேண்டும்'' என்றார்.

இந்த வேளையில் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரை விமர்சனம் செய்தார். அப்போது அவர், ‛‛உத்தவ் தாக்கரே, பாலேசாகேப் தாக்கரேவுக்கு துரோகம் செய்துள்ளார். வீர சாவர்க்கரை அவர் நினைத்து பார்க்கவில்லை. போலியான சிவசேனாவாக செயல்பட்டு மும்பை மற்றும் மகாராஷ்டிரா மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார். ஆனால் நான் மும்பைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். முதல் புல்லட் ரயில் விரைவில் மும்பைக்கு வருகிறது.

அதேபோல் சாவர்க்கர் பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று என்சிபி தலைவருக்கு (மறைமுகமாக சரத்பவார்) சவால் விடுக்கிறேன். அவரால் அதுபற்றி ராகுல் காந்தியிடம் பேச முடியுமா?. ‛இந்தியா' கூட்டணி என்பது நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை பறித்து வாக்கு ஜிகாத் என்று பேசுபவர்களுக்கு கொடுக்க விரும்புகிறது'' என விமர்சனம் செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+