‛‛166 பேர் பலி’’.. 15 ஆண்டுக்கு முன் மும்பை 26/11 தாக்குதல் நடந்தது எப்படி? கலங்கிய பிரதமர் மோடி
மும்பை: கடந்த 2008ம் தேதி நவம்பர் 26ம் தேதி மும்பையில் பயங்கரவாத தாக்குல் நடத்தப்பட்ட நிலையில் 166 பேர் பலியாகினர். 300 பேர் வரை காயமடைந்தனர். இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிரவைத்த இந்த தாக்குதல் நடந்து இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் பிரதமர் மோடி தனது ‛மன் கீ பாத்' உரையில் கலங்கினார்.
இன்று 26.11.2023.. இந்தியா பரபரப்பு இன்றி அமைதியாக இருக்கிறது. ஆனால் அப்படியே கடந்த 15 ஆண்டுக்கு முந்தை இதேநாளே எடுத்த கொண்டால் அது இந்திய வரலாற்றில் கருப்பு நாளாக இருக்கும். ஆம், கடந்த 2008 நவம்பர் மாதம் 26ம் தேதியை தான் கூறுகிறேன்.

இந்த தேதியில் தான் மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இரவிலேயே படகு வழியாக மும்பைக்குள் ஊடுருவிய லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் 10 பயங்கரவாதிகள் மும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.
மும்பையின் அடையாளாக இருக்கும் தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம், நாரிமண் ஹவுசில் உள்ள யூத மையம் மற்றும் லியோபோல்ட் கஃபே ஆகியவற்றில் தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக பிரிட்டன் மற்றும் யூதர்கள் வந்து செல்வார்கள் என்பதால் இந்த இடங்கள் டார்க்கெட் செய்யப்பட்டன.
இந்த கொடூர தாக்குதலில் 166 பேர் பலியாகினர். மேலும் 300 பேர் காயமடைந்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தியதால் பலி மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.இந்த தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
அந்த சமயத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை, போலீசாருக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. 4 நாட்கள் வரை நடந்த சண்டையில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே உயிரோடு சிக்கினார். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முயன்ற முகமது அஜ்மல் அமீர் கசாப் மட்டும் கைது செய்யப்பட்டார். இவருக்கு 2010ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் புனே சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
மேலும் இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர், போலீசாரும் உயிர் தியாகம் செய்தனர். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக கருதப்படும் இதுதான் 26/11 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த தாக்குதல் நடந்து 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அதுபற்றி பிரதமர் மோடி இன்றைய ‛மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பேசினார். அப்போது இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
நவம்பர் 26ம் தேதியை நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த நாளில் தான் நடு மிகவும் கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்க உள்ளானது. பயங்கரவாத தாக்குதலால் மும்பை மற்றும் ஒட்டுமொத்த நாட்டையும் 26/11 ‛அட்டாக்' நடுங்க வைத்தது. அதில் இருந்து இந்தியா மீண்டு வந்த நிலையில் இப்போது பயங்கரவாதத்தை நசுக்க துணிச்சலாக செயல்பட்டு வருகிறது'' என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications