பெண் மேனேஜர் தற்கொலைக்கும் சுஷாந்த் சிங் மரணத்திற்கும் தொடர்பா? என்ன நடந்தது?.. போலீஸின் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் பெண் மேனேஜர் தற்கொலை செய்ததற்கும் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்று நேற்று போலீஸ் விளக்கம் கொடுத்துள்ளது.

Recommended Video

    பெண் மேனஜர் தற்கொலை... அடுத்த வாரமே Sushant Singh தற்கொலை.. என்ன நடந்தது?

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் நேற்று மதியம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மும்பை வீட்டில் தூக்கில் தொங்கி இவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்தவர். கை போச்சே என்னும் இந்தி படத்தில் அறிமுகம் ஆனவர் வடஇந்தியாவில் மட்டுமின்றி தென்னிந்தியாவில் பிரபலம். இவரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பெண் மேனேஜர்

    பெண் மேனேஜர்

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்புதான் சுஷாந்த் சிங்கின் முன்னாள் பெண் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த்சிங்கிங் முன்னாள் பெண் மேனேஜர் கடந்த ஜூன் 8ம் தேதி இதேபோல் தற்கொலை செய்து கொண்டார். அவர் பெயர் திஷா சலியான். மும்பையில் 14 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து அவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த தற்கொலை நிகழ்ந்த போது அதே அறையில் அந்த பெண் மேனேஜரின் காதலன் இருந்துள்ளார். இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறது. இந்த தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இது தொடர்பாக நிறைய மர்மங்கள் நிலவி வருகிறது. இவரின் மறைவுக்கு சுஷாந்த் மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருந்தார்.

    போலீஸ் சந்தேகம்

    போலீஸ் சந்தேகம்

    இந்த நிலையில் அந்த பெண் மேனேஜரின் மரணத்திற்கும் சுஷாந்த் தற்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று போலீசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், அந்த பெண் மேனேஜர் ஒரு வாரம் முன்புதான் பலியாகி உள்ளார். அவரும் தற்கொலைதான் செய்து கொண்டு இருக்கிறார். அந்த வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்பு உள்ளதா

    தொடர்பு உள்ளதா

    இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கவில்லை. அவரின் தற்கொலையின் போது, நாங்கள் சுஷாந்த் சிங்கை விசாரிக்கவில்லை. அப்போது எங்களுக்கு சந்தேகம் எதுவும் இல்லை. இப்போது நாங்கள் இரண்டு பேரின் போன் ரெக்கார்டை சோதனை செய்து வருகிறோம். இரண்டு பேரும் போனில் பேசி இருக்கிறார்களா அல்லது சந்தித்துக் கொண்டார்களா என்று விசாரித்து வருகிறோம்.

    உறுதியாக தெரியாது

    உறுதியாக தெரியாது

    சுஷாந்த் மரணத்திற்கு இன்னும் உறுதியாக காரணம் தெரியவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளார்கள். அதற்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்போம். இன்று மாலை சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின் உண்மை தெரிய வரும், என்று போலீசார் கூறியுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+