பிரதமர் மோடி தோற்கடிக்க முடியாதவர்.. இந்தியாவின் ஆன்மாவாக திகழ்கிறார்.. மகாராஷ்டிரா அமைச்சர்!
மும்பை: பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மாவாக திகழ்கிறார் என்றும் அவர் தோற்கடிக்க முடியாதவர் என்றும் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சுரேஷ் கடே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த 2 ஆண்டுகளை கடந்து நடந்து வந்தது.
திடீரென சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேவின் நெருக்கமானவருமான ஏக்னாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களை திரட்டி உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பினார்.

இரண்டாக பிரிந்த சிவசேனா
அவர் தனது ஆதரவு எம் எல் ஏக்களுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்னாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா இரண்டாக பிரிந்தது. ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் உள்ளவர்கள் தற்போது பாஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளதால் பாஜக மீண்டும் ஆளும் கட்சியாக மாறியது.

சரத்பவாரை வீழ்த்த முடியாது
இந்த நிலையில், மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கும் சுரேஷ் கடே தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுரேஷ் கடே பந்தர்பூர் பகுதியில் வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பாரமதி பகுதியில் சரத் பவாரையும் அவரது நெருங்கிய உறவினரகளையும் ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பிரதமர் மோடி தோற்கடிக்க முடியாதவர்
இக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுரேஷ் கடே கூறியதாவது:- ''பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மாவாக திகழ்கிறார். அவர் தோற்கடிக்க முடியாதவர். முன்னாள் பிரதமர்கள் அடால் பிஹாரி வாஜ்பாய் மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் தேர்தல்களில் தோல்வி அடைந்து இருக்கின்றனர். ஆனால் மோடி ஒருபோதும் தோற்க மாட்டார். பாரதிய ஜனதா கட்சியின் மிகப்பெரும் தலைவர்களில் ஒருவரான அத்வானி கூட தோல்வி அடைந்து இருக்கிறார்'' என்றார்.

அத்வானி தேர்தலில் தோற்கவில்லை
அத்வானி தேர்தலில் தோல்வி அடைந்ததாக அமைச்சர் சுரேஷ் கடே கூறினாலும் , உண்மையில் அத்வானி தேர்தலில் தோற்கவில்லை. 1977 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அத்வானி தான் போட்டியிட்ட அனைத்து மக்களவை தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அத்வானி போட்டியிடவில்லை. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1977 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

வாஜ்பாய்
அதேபோல், வாஜ்பாய் 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் தோல்வியை தழுவியிருக்கிறார். 1957 ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட வாஜ்பாய், ஒன்றில் தோல்வி அடைந்தார். அதன்பிறகு 1962 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் வாஜ்பாய் தோல்வி அடைந்து இருக்கிறார்.
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications