நடிகையை பார்ட்டிக்கு கூப்பிட்டு சீரழித்த இருவர் - மும்பையில் கொடூரம்
நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி விருந்து வைத்து நடிகையை பலாத்காரம் செய்த சினிமா தயாரிப்பாளரையும், இசையமைப்பாளரையும் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
மும்பை: மாடல் அழகியை நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பார்ட்டிக்கு அழைத்து படுக்கையில் தள்ளி பலாத்காரம் செய்துள்ளனர். நடிகை அளித்த புகாரின் பேரில் சினிமா தயாரிப்பாளரையும், இசையமைப்பாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த மாடல் அழகி மும்பையின் சார்கோப் வசித்து வருகிறார். அவருக்கு நடிகை ஆக வேண்டும் என்பது ஆசை. சினிமா தயாரிப்பாளர் முந்த்ராசிங் நாகரின் அறிமுகம் கிடைத்தது.
புதிய படம் எடுக்கப் போவதாகவும், எடுக்கப்போவதாகவும், இசையமைப்பாளரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் கூறி நடிகையை அழைத்தார் அந்த தயாரிப்பாளர்.

நடிக்க வாய்ப்பு
மலாடில் உள்ள தனது வீட்டிற்கு நடிகையை டிஸ்கஸ் செய்யலாம் என்று வரவழைத்தார் தயாரிப்பாளர். அந்த வீட்டில் கரன் வாஹி என்ற இசையமைப்பாளரும் இருந்தார். அந்த வீட்டில் நடிகைக்கு விருந்து கொடுத்தனர். தங்களின் படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்யலாம் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.

கட்டிப்பிடித்து முத்தம்
விருந்து சாப்பிட்டு முடிந்த உடன் சமையலறை பக்கம் சென்ற போது பின்னாலேயே சென்ற தயாரிப்பாளர் கட்டியணைத்து முத்தம் கொடுத்தாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தயாரிப்பாளரை தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. கீழே விழுந்து மயக்கமானார்.

சீரழித்த கயவர்கள்
நடிகையை மயக்கமடைய வைத்த கயவர்கள் படுக்கையில் தள்ளி பலாத்காரம் செய்து விட்டனர். காலையில் எழுந்து பார்த்த போதுதான் உடமெல்லாம் அடித்துப்போட்டது போல அசதியாக இருந்தது. பல இடங்களில் காயம் இருக்கவே, நடந்தது என்னவென்ற உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

புகார் அளித்த நடிகை
உணவில் மயக்கமருந்து கொடுத்து இருவரும் தன்னை அனுபவித்து விட்டனர் என்று தயாரிப்பாளர் மீதும் இசையமைப்பாளர் மீதும் நடிகை புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், தயாரிப்பாளரையும், இசையமைப்பாளர் கரன்வாஹியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாய்ப்பு தருவதாக கூறி நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications