சொத்துக்கள் சிதறின.. கட்டிலுக்கு அடியில் யாரிந்த பெண்? அதுவும் பூட்டிய வீட்டிற்குள்.. விழித்த மும்பை
சென்னை: தம்பதி இருவரும் வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டையும் பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்.. பிறகு பூட்டிய வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் அடித்துள்ளது.. இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு போகவும், போலீசார் விரைந்து வந்து, பூட்டிய வீட்டை திறந்துள்ளனர்.. உள்ளே சென்று பார்த்தபோது, கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இது தொடர்பான விசாரணையையும் தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது மும்பையில்?
மும்பை கோரேகாவ் மோதிலால் நகரில் வசித்து வருபவர் ராகினி.. இவருக்கு 63 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் பிரதாப்.. இதில்பிரதாப்பிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்..

2வது காதல் திருமணம்
கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்துவந்துவிட்டார்.. ஆனால், முறைப்படி அவரை விவாகரத்து செய்யாமல், ராகினியுடன் திருமணம் செய்து கொண்டு வசித்துவந்துள்ளார். ராகினியுடன் அவரது அம்மாவுடன் அதே வீட்டில் வசித்து வந்தார். ஆனால், ராகினி அம்மா, 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில், சம்பவத்தன்று, வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டு, தானும், தன்னுடைய மனைவியும் வெளியில் செல்வதாக சொல்லி, வீட்டுச் சாவியையும் பக்கத்து வீட்டுக்காரரிடம் தந்துள்ளார் பிரதாப். அப்போது வெளியில் புறப்பட்டு சென்ற, மறுபடியும் வீட்டுக்கு திரும்பவில்லை.. 2 நாள் கழித்து பிரதாப்பின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச துவங்கியிருக்கிறது. இதனால் அக்கம்பக்கத்தினர் உடனடியாக பிரதாப்புக்கு போன் செய்தனர்.. ஆனால், அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
படுக்கைக்கு அடியில்
பிறகு பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே யாருமேயில்லை.. பிறகு அங்கிருந்த பெட்ரூமிலிருந்த பாக்ஸை திறந்து பார்த்தபோது உள்ளே ராகினியின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.. ராகினியின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிய வந்தது. ஆனால், பிரதாப் இதுவரை எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. தலைமறைவாகிவிட்டதால் அவரை போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சொத்துக்கள் அதிகம்
இது குறித்து ராகினியின் உறவினர் சொல்லும்போது, சுமார் 14 வருடங்களுக்கு முன்பு, ராகினியை பிரதாப் காதல் திருமணம் செய்து கொண்டார், முதல் மனைவி, குழந்தைகள் உத்தரபிரதேசத்தில் வசித்து வருகிறார்கள்.. பிரதாப்புக்கு நிலையான வேலை இல்லை. ஆரம்பத்தில் பிரதாப் டாக்சி ஓட்டிவந்தார்.. அதற்கு பிறகு எங்கும் வேலைக்கு செல்லவில்லை.
ராகினியுடன் அவருக்கு அடிக்கடி தகராறு வரும்.. ஆனால், எதற்காக அந்த தகராறு வரும் என்று எங்களுக்கு தெரியாது.. ஆனால், கொலை செய்யும் அளவுக்கு கருத்து வேறுபாடு இருந்திருக்கும் என்று எங்களுக்கு தெரியாது. ராகினி பெயரில் சொத்துக்கள் நிறைய உள்ளது.. எனவே, சொத்துக்காக இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதால் போலீஸார் அதனை விசாரிக்கவேண்டும்.
5 லட்சம் நகைகள் எங்கே
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகினி வீட்டிலிருந்து 5 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடு போனது. வீட்டிற்குள் வெளியாட்கள் யாரும் நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. எனவே, இந்த திருட்டுக்கு பின்னணியிலும் பிரதாப் இருக்க வாய்ப்புண்டு.. இதை ராகினி கண்டுபிடித்திருக்கலாம்.. அதனாலேயே ராகினியை கொலை செய்திருக்கலாம் என்று தன்னுடைய சந்தேகத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications