14 போன் கால்..’மனிதன்’ படத்தை விஞ்சிய ஸ்கெட்ச்..! போர்ஷே கார் விபத்து.. ரத்தத்தை மாற்றிய மருத்துவர்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரபல தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் அதிவேகமாக போர்ஷே காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தி இரண்டு பேரை கொன்ற வழக்கில் நாளுக்கு நாள் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி வைத்த மருத்துவர் மற்றும் சிறுவனின் தந்தை இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

police cctv crime

புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை சுமார் 2 மணி அளவில் போர்ஷே சொகுசு காரில் அதிவேகமாக சிறுவன் சென்று கொண்டிருந்தான். 17 வயது தான் அந்த சிறுவனுக்கு இருக்கும் என கூறப்படுகிறது.

போர்ஷே கார் விபத்து: அளவுக்கு அதிக மது போதையில் போர்ஷே காரில் வேகமாக சென்ற பொழுது அந்த கார் இருசக்கர வாகனத்தில் சென்ற அனீஸ் மற்றும் அவரது நண்பர் அஸ்வினி ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். மது போதையில் இருந்த அந்த சிறுவன் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் அந்த காரை ஓட்டியது தெரியவந்த நிலையில் விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

14 மணி நேரத்தில் ஜாமீன்: இந்த நிலையில் காரை ஓட்டி வந்த அந்த சிறுவனின் தந்தை அப்பகுதியில் மிகப்பெரும் ரியல் எஸ்டேட் செய்து வரும் தொழிலதிபர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அந்த சிறுவனுக்கு 14 மணி நேரத்தில் ஜாமீன் கிடைத்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசியல் கட்சிகளின் அழுத்தத்தை தொடர்ந்து இந்த விவகாரத்தை புனே காவல்துறை சீரியசாக எடுத்துக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து வருகிறது.

ஜாமீன் ரத்து: இதனையடுத்து அச்சிறுவனுக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான். அதுமட்டுமல்லாமல் சிறுவனுக்கு கார் வழங்கிய குற்றத்திற்காக அவரது தந்தை விஷால் கைது செய்யப்பட்டார். சிறுவனுக்கு மது வழங்கிய குற்றத்திற்காக பாரின் உரிமையாளர்கள் ஊழியர்களும் கைது ஆகினர். தொடர்ந்து இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுவனுக்கு பதில் அந்த குடும்பத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த ஒருவரை சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிறுவனின் தாத்தாவும் கைதானார்.

ரத்த மாதிரி: பரபரப்பான நகர்வுகளை அந்த வழக்கு சந்தித்து வந்த நிலையில் இந்தியாவையே அதிரச் செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது. சிறுவனின் ரத்த மாதிரியை சேகரித்த போலீசார் சசூன் அரசு மருத்துவமனையில் கொடுத்திருந்தனர். ஆனால் சிறுவன் மது அருந்தவில்லை என அறிக்கையை வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் கொடுத்த ரத்த மாதிரி மாற்றப்பட்டது தெரியவந்தது.

மருத்துவர்கள் கைது: அந்த மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் அஜய் தவாரே, முதன்மை மருத்துவ அதிகாரி ஹரி ஹல்னார் ஆ தொட்டியில் வீசிவிட்டு வேறு ஒருவரின் ரத்த மாதிரியே வைத்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவர்கள் இருவரும் கைதான நிலையில், மருத்துவமனையில் போலீசார் நடத்திய சோதனையில் மூன்று லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. அது மட்டுமல்லாமல் மருத்துவர்களுக்காக லஞ்சம் பெற்ற மருத்துவமனையின் ஊழியர் ஒருவரும் நேற்று கைதானார்.

புதிய தகவல்: இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது போர்ஷே காரை ஓட்டி வந்த சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் மற்றும் லஞ்சம் பெற்று ரத்த மாதிரிகளை மாற்றி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான அஜய் தவாரே சம்பவத்தன்று 14 முறை தொலைபேசியில் தகவல்களை பரிமாறிக்கொண்ட தாக போலீசார் கூறியுள்ளனர். அகர்வால் காலை 8:15 மணிக்கு தவேருக்கு முதல் அழைப்பு விடுத்த நிலையில், காலை 11 மணி வரை அடுத்த மூன்று மணி நேரத்தில் இருவரும் 14 முறை பேசிக் கொண்டுள்ளனர். இடைப்பட்ட நேரத்தில் ரத்த மாதிரிகள் மாற்றப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+