ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்.. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கால் சிக்கல்
மும்பை: ‛‛மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் சுட்டு கொன்றது'' என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 2014ல் பேசினார். இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மகாராஷ்டிரா பிவாண்டி நீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராகி உள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் ராகுல் காந்தி. இவர் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் மரணம் பற்றி பேசினார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை அவர் விமர்சனம் செய்திருந்தார்.
ராகுல் மீது அவதூறு வழக்கு
இதுதொடர்பாக ராகுல் காந்தி, ‛‛மகாத்மாக காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் சுட்டு கொன்றது. ஆனால் இப்போது தேர்தலுக்காக காந்தியின் பெயரை பயன்படுத்துகின்றனர்'' என்று குற்றம்சாட்டியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகியான ராஜேஷ் குண்டே என்பவர் பிவாண்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
வழக்கின் பின்னணி
மகாத்மா காந்தியின் படுகொலைக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பு இல்லை. ஆனால் ராகுல் காந்தி தொடர்புப்படுத்தி பேசி ஆர்எஸ்எஸ் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பார்க்கிறார் என்று கூறியிருந்தார். இந்த அவதூறு வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ராகுல் காந்தி ஆஜர்
இந்த வழக்கில் ராகுல் காந்தியின் ஜாமீனுக்கு முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் பாண்ட் வழங்கியிருந்தார். ஆனால் தற்போது அவர் மரணடைந்துவிட்டார். இதனால் சிவராஜ் பட்டீலுக்கு பதில் புதிய பாண்ட் வழங்க வேண்டும். இதற்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
பலத்த பாதுகாப்பு
இதற்காக ராகுல் காந்தி இன்று டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வந்தார். அதன்பிறகு அவர் காரில் நீதிமன்றம் வந்தார். ராகுல் காந்தியின் வருகையையொட்டி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருந்து சாலை மார்க்கமாக மும்பை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து மாலை 4 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications