“தேர்தல் பத்திரம் மூலம்.. மிரட்டி பணம் பறிப்பு! எல்லாம் மோடி தலைமையில்தான்!” ராகுல் குற்றச்சாட்டு
மும்பை: தேர்தல் பத்திரங்கள் மிகப்பெரிய ஊழல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மிரட்டி பணம் பறிக்கும் மோசடி என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாரத் ஜடோ யாத்திரையின்போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "அரசியல் கட்சிகளை உடைக்க பாஜகவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக அவர்கள் எந்த விசாரணை அமைப்புகளையும் பயன்படுத்தவில்லை. ஆனால் பணத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த பணம் தேர்தல் பத்திரம் வடிவில்தான் வந்திருக்கிறது.

மிலிந்த் தியோரா மற்றும் அசோக் சவான் போன்ற சிலர் காங்கிரஸை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும் நாங்கள் மனம் தளரவில்லை. ஒன்றாக இணைந்து நின்று தேர்தலை எதிர்கொள்வோம். கார்ப்ரேட் இந்தியாவிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. ஆனால், இது பிரதமரால் நடத்தப்படுகிறது என்பது தற்போது வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
வழக்கு: அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கடந்த 2018ம் ஆண்டு அமல்படுத்தியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
பத்திரம்: மட்டுமல்லாது தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து நேற்று மாலை இந்திய தேர்தல் ஆணையம், எஸ்பிஐ வங்கி வழங்கிய விவரங்களை வெளியிட்டது. இதில் நிறுவனங்கள் வாங்கிய நன்கொடை பத்திரங்களும், கட்சிகள் நன்கொடை பத்திரங்களை பணமாக மாற்றிய விவரங்களும் இடம்பெற்றிருந்தன. அதன்படி,
நன்கொடை: கடந்த 2022ம் ஆண்டு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உள்ளான, ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (லாட்டரி மார்ட்டின்) என்ற நிறுவனம் அதிகபட்சமாக தனது இரு நிறுவனங்களின் பெயரில் ரூ.1,350 கோடி மதிப்புடைய தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அதேபோல ஹைதராபாத்தை சேர்ந்த மெகா என்ஜினீயரிங் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
மேலும் மும்பையைச் சேர்ந்த க்விக் சப்ளை செயின் நிறுவனம் ரூ.410 கோடி, அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் ரூ.398 கோடி, சுனில் மிட்டலின் மூன்று நிறுவனங்கள் இணைந்து ரூ.246 கோடி, லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் ரூ.35 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தன.
காங்கிரஸ்: அதேபோல தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ11,733 கோடி நன்கொடையாக அரசியல் கட்சிகள் பெற்றிருக்கின்றன. இதில் பாஜக மட்டும் ரூ.6,566 கோடி பெற்றிருக்கிறது. அதாவது மொத்த தேர்தல் பத்திரங்களில் 58.5% நிதி பாஜவுக்கும் மட்டும் கிடைத்திருந்தது. பாஜக தவிர காங்கிரஸ் ரூ.1,123 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,092 கோடியும் நன்கொடையாக பெற்றிருக்கிறது.
ஆனால், எந்த நிறுவனங்கள் எந்த கட்சிக்கு எவ்வளவு கொடுத்தன? என்கிற விவரங்கள் வெளியாகவில்லை. இதனை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications