வாழ்க்கையையே நாசமாக்கிட்டாரு.. திருமணமான ஒரே மாதத்தில் கணவரை போலீஸில் பிடித்து கொடுத்த ராக்கி சாவந்த்
ராக்கி சாவந்தை கொடுமைப்படுத்தியாக எழுந்த புகாரில் கணவர் அடில் கான் கைது
மும்பை: பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்தை அவரது கணவர் அடில் கான் துரானி அடித்து கொடுமைப்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் அடில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக அறியப்படுபவர் ராக்கி சாவந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் ஏற்கெனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ராக்கி சாவந்த் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

அடில் துரானியுடன் திருமணம்
இந்த நிலையில் அடில் துரானி என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார் ராக்கி சாவந்த். இவருடைய தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் திடீரென கடந்த ஜனவரி முதல் வாரத்தில் காதலனை கரம் பிடித்தார் ராக்கி சாவந்த். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

10 நாட்களில் ராக்கி கைது
இந்த நிலையில் திருமணமான 10 நாட்களில் ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில், ராக்கி சாவந்த் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வருவதாக ஷெர்லின் குற்றம்சாட்டியிருந்தார்.

ராக்கி சாவந்த் கைது
இந்த புகாரின் பேரில் போலீஸார் ராக்கி சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராக்கி சாவந்தை கைசு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆபாசமாக நடிகை ஷெர்லினின் படத்தை சித்தரித்தது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிலிடம் இருந்து தன்னை பிரிக்க சதி
இதுகுறித்து ராக்கி சாவந்த் கூறுகையில் அடிலுடன் இருந்து தன்னை பிரிப்பதற்காக இது போன்றதொரு பொய்யான தகவலை கூறியுள்ளார்கள். மைசூரிலிருந்து யாரோ சிலர் இது போல் செய்வதாக ராக்கி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகை ராக்கி சாவந்திற்கும் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மோதல் இருந்து வருகிறது.

ஷெர்லின் சோப்ராவுக்கும் ராக்கிக்கும் மோதல்
ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் செய்து வருகிறார்கள். இருவரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி குற்றம்சாட்டி கொள்கிறார்கள். ராக்கி சாவந்த் தனது மியூசிக் அகாதெமியை திறக்க நேற்று திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் கைது செய்யப்பட்டுவிட்டார். இந்த நிலையில் தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.

இஸ்லாமிய மதம்
கணவருக்காக இஸ்லாமிய மதத்திற்கு ராக்கி சாவந்த் மாறினார். அவர் தன்னுடைய பெயரை கூட ராக்கி சாவந்த் பாத்திமா என மாற்றிக் கொண்டார். இதனிடையே ராக்கி சாவந்தின் தாய் புற்றுநோயால் மரணமடைந்துவிட்டார். இதனால் மனவேதனையில் உள்ள ராக்கி, தனது திருமண வாழ்வும் சிக்கலில் இருப்பதாக கூறியுள்ளார். தனது கணவர் அடில் துரானி தன்னை அடித்து கொடுமை செய்வதார மும்பை ஒஷிவரா காவல் நிலையத்தில் ராக்கி புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் அடிலை கைது செய்துள்ளனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராக்கி, என்னை அடித்து துன்புறுத்தினார் அடில், அப்போது நான் என்னை ஏன் அடிக்கிறாய், எல்லாவற்றையும் வெளியே சொல்வேன் என கூறியதற்கு முடிந்தால் சொல், உன் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள் என கூறிய ராக்கி, தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் அடில் சென்றுவிட்டார் என் தெரிவித்திருந்தார்.

அடில் கைது
இந்த நிலையில் அடிலை போலீஸார் ராக்கி வீட்டில் வைத்துதான் கைது செய்தனர். மேலும் தனது நகை, பணத்தை அடில் பறித்துக் கொண்டதாகவும் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து ராக்கி ஒரு ஆடியோவையும் வெளியிட்டுள்ளார், அதில் அடில் எனது வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார். என்னை அடித்து உதைத்ததோடு எனது நகைகள், 4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார் என அழுதவாறே பேசியுள்ளார். மேலும் திருமணமான ஒரே மாதத்தில் கணவரை பிரிந்துவிட்டார் ராக்கி! ஆனால் வேறு ஒரு பெண்ணுடன் போய்விட்டார் என்று கூறியிருந்த நிலையில் ராக்கியின் வீட்டில் வைத்துதான் அடிலை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications